செவ்வாய், ஜூன் 23, 2015

பொன்சேகாவின் மருகமனின் மனு நிராகரிப்பு

தனது கடவுச்சீட்டை விடுவித்து வெளிநாட்டு பயண தடையை நீக்கவும், அரசுடைமை ஆக்கப்பட்ட தனது சொத்துகளை மீளளளிக்குமாறு கோரியும் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்ன, இன்று விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான தனுன கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நீதிமன்றத்திற்கு ஆஜராகாதிருந்தமை காரணமாக இவ்வேண்டுகோளை பரிசீலனை செய்ய முடியாது என கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா தென்னகோன் இதன்போது தெரிவித்தார்.