புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2015

திருடன் என நினைத்து கால்பந்து வீரரை கைது செய்த பொலிசார்: கொந்தளித்த ரசிகர்கள்

சுவிட்சர்லாந்து நாட்டில் ‘பிக்பாக்கெட்’ திருடன் என தவறாக சந்தேகித்து கால்பந்து வீரர் ஒருவரை பொலிசார் கைது செய்ததை கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
துனிஷியா நாட்டின் தேசிய கால்பந்து விளையாட்டு விரரான Chikhaoui (28) என்பவர், தனது மனைவியுடன் அண்மையில் சுவிஸில் உள்ள சூரிச் நகரிற்கு ஷொப்பிங் சென்றுள்ளார்.
அந்நகரில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், பொலிசார் ‘பிக்பாக்கெட்’ திருடர்களை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த கால்பந்து வீரரை ‘பிக்பாக்கெட்’ திருடன் என தவறாக சந்தேகித்த பொலிசார், அவருக்கு பின்னால் சென்று திடீரென கைகளில் விலங்கை பூட்டினர்.
என்ன நடக்கிறது என்பதை புரிந்துக்கொள்வதற்கு முன், அவரை பிடித்து தரையில் படுக்க வைத்து முகத்தை தரையில் தேய்த்தவாறு பொலிசார் விசாரித்தனர்.
இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத Chikhaoui, பேச முடியாமல் வலியால் துடித்துள்ளார். தனது கணவனை தனக்கு முன்னால் பொலிசார் கைது செய்து தரையில் தள்ளியுள்ளதை கண்டு அவருடைய மனைவி அதிர்ச்சியில் உறைந்து போனார்.
பின்னர், எவ்வளோ எடுத்துக்கூறியும் அவற்றை நம்பாத பொலிசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
கால்பந்து விளையாட்டு வீரரை கைது செய்து அழைத்து வருவதை பார்த்த உயர் அதிகாரி ஒருவர், அவரை விடுவித்து பொலிசாரின் நடவடிக்கைக்கு மன்னிப்பு கோரி அனுப்பி வைத்தார்.
விளையாட்டு வீரர் இது குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், சூரிச் ரசிகர்கள் மன்ற தலைவரான Ancillo Canepa-விடம் இது குறித்து புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து, விளையாட்டு வீரருக்கு நேர்ந்த அவமானத்திற்காக பொலிசார் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என நகர ஆணையரான Richard Wolff-விடமும் முறையிட்டுள்ளார்.
Chikhaoui தனது நாட்டின் தேசிய விளையாட்டுகளில் பங்கேற்க துனிஷியா செல்லவுள்ளதால், அவர் சுவிஸிற்கு திரும்பிய பிறகு தான் இது குறித்து விசாரணை செய்ய முடியும் என ஆணையர் கூறியுள்ளார்.
விளையாட்டு வீரரை பொது இடத்தில் அவமதிக்கும் வகையில் செயல்பட்ட பொலிசார் மீது சூரிச் கால்பந்து ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ad

ad