புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2015

இந்தியாவில் டிவிட்டர் ட்ரண்டில் முதலாம் இடத்தை பெற்றுத் தந்தமைக்கும் எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்: கலைஞர்


திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை:

’’ஜூன்-3 அன்று எனது 92ஆவது பிறந்தநாளினையொட்டி, உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் என 47,66,837 பேர், என்னிடம் கொண்டுள்ள பாசத்தின் -அன்பின் காரணமாக குறுஞ்செய்தி வாயிலாகவும், முகநூல், டிவிட்டர்,கூகுள் ப்ளஸ், ஹாஸ்டாக் மற்றும் இணைய தளத்தின் வாயிலாகவும், நேரிலும், கடிதம் மற்றும் தொலைபேசி மூலமாகவும் எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பாக, டிவிட்டர் வலைதளத்தில்  எனக்குப் பிறந்த வாழ்த்து தெரிவித்ததன்காரணமாக, நேற்று மட்டும் இந்தியாவில் டிவிட்டர் ட்ரண்டில் முதலாம் இடத்தை பெற்றுத் தந்தமைக்கும் எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

குறுஞ்செய்தி - இணையதளம் - சமூக வலைதளம் வாயிலாகவும் - நேரிலும், கடிதம் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி!

தலைவர் கலைஞர் அறிக்கை ஏற்கனவே கடந்த 2-6-2015 அன்று நான் வெளியிட்ட ‘பிறந்தநாள் செய்தியில்’ “என்னுடைய 91வது அகவை நிறைவடைந்து, 92வது அகவை பிறக்கிறது. கடந்த 18-5-2015 அன்று “முத்தமிழ்ப் பேரவை”யின் 37வது ஆண்டு இசைவிழாவில் பேசும்போது, “நான் ஏறத்தாழ 90 ஆண்டுகள் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து உங்களோடு இரண்டறக் கலந்து, உங்களுக்காகப் பாடுபடத் தொடங்கி, இன்றைக்கும் உங்களுக்காகவே பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். நான் இன்னும் ஆறேழு அகவைகள் - அல்லது அதிக மானால் எட்டு ஆண்டுகள் - 100 வயது வரை வாழ்ந்து உங்களோடு நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுவேன். அப்படிக் கொண்டாடுகிற நேரத்தில் என்னுடைய உடலும் இப்போது, இந்த அளவுக்குத் தளர்ந்திருக்கிறதே, இதைப்போல அப்போதும் தளர்ந்துதான் இருக்கும். அந்தத் தளர்ச்சியைப் போக்க எனக்கு உணர்ச்சியையும், உத்வேகத்தையும் வழங்க நான் உங்களைத்தான் உறுதியோடு நம்பியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டேன். ஆம், நீங்கள் எந்த அளவுக்கு எழுச்சியோடு இருக்கிறீர் களோ, அந்த அளவுக்கு நானும் தளர்ச்சி நீங்கித் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பாடுபடுவேன்.”என்று குறிப்பிட்டுள்ளபடி;  தங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் எனக்கு மக்கள் பணியை ஊக்குவிப்பதாகவும்; மென்மேலும் பணியாற்றிடத் தூண்டுகோலாகவும் உள்ளது என்பதைத் தெரிவித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’’

ad

ad