புதன், ஜூன் 24, 2015

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் சபாநாயகரின் சந்தேகக் கேள்விக்குறி


நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று சந்தேகக் கேள்விக்குறியொன்றை வெளிப்படுத்தினார்.
நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரதியமைச்சர் ஹர்சா டி சில்வா, கேள்விக்கு தாம் நாளையதினம் பதில் வழங்குவதாக குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றால் என்று தமது கருத்தை முடித்துக்கொண்டார்.
இலங்கையில் இன்று இரவு நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்புக்கு மத்தியிலேயே சபாநாயகரின் இந்த கருத்தும் வெளியாகியுள்ளது.
இதேவேளை தற்போது இலங்கையின் அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.