புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2015

புலம்பெயர் விழா குறித்து சில ஊடகங்கள் பிழையான செய்தி வெளியிடுகின்றன: மங்கள சமரவீர


புலம்பெயர் விழா தொடர்பில் சில ஊடகங்கள் பிழையான செய்தி வெளியிட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள புலம்பெயர் விழா குறித்து சில ஊடகங்கள் பிழையான தகவல்களை வழங்கி வருகின்றன.
இந்த நிகழ்வு ஈழவாதத்தை மீளக் கொண்டு வர மேற்கொள்ளப்படும் முயற்சி என்ற குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் கிடையாது.
புலம்பெயர் மக்களுக்காக நடத்தப்பட உள்ள விழாவிற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு 35 லட்ச அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை.
வெளிநாடுகளில் உயர் பதவிகளை வகித்து வரும் இலங்கையர்களின் ஒத்துழைப்பை நாட்டின் அபிவிருத்திக்காக பெற்றுக்கொள்வதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.
இந்தியா, அயர்லாந்து போன்ற நாடுகளும் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்துகின்றன.
சிங்கள தமிழ் கடும்போக்குவாதிகள் சுதந்திரம் பெற்றுக்கொண்டது முதல் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருந்தனர்.
எனினும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டில் மிதவாத கொள்கைகளை பின்பற்றும் மக்கள் இந்த கடும்பொக்குவாதிகளை தோற்கடித்துள்ளனர்.
மீண்டும் நாட்டில் கடும்போக்குவாதம் தலைதூக்க இடமளிக்கப்பட முடியாது என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் இன்று பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.

ad

ad