புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2015

மீண்டும் சொதப்பிய இந்தியா: வங்கதேச அணி மிரட்டல் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றிபெற்றுள்ளது.
வங்கதேச சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி அந்நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
மிர்புரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் இந்திய அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.
இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, தவான் களமிறங்கினர். முதல் ஓவரின் 2வது பந்திலே ரோஹித் சர்மா (0)  ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து வந்த விராட் கோஹ்லி 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தவான் அரைசதம் (53) கடந்து வெளியேறினார்.
ராயுடு வந்த வேகத்தில் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். இதனால் 110 ஓட்டங்களிலே 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது.
இந்தியா 28 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட்டுக்கு 132 ஓட்டங்கள் எடு்த்திருந்தது. பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் டோனி (30), ரெய்னா (17) நிதானமாக விளையாடினர்.
இந்திய அணி 43.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டு போட்டி பாதிக்கப்பட்டதால் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
மழை நின்றதும் களமிறங்கிய இந்திய அணி 44.6 ஓவர்களில் 200 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து 'டக் வெர்த்லீவிஸ்' முறைப்படி வங்கதேச அணிக்கு 200 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 38 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் வென்ற வங்கதேசம் தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad