புதன், ஜூன் 03, 2015

காதலியின் கழுத்தை வெட்டிய காதலன் கைது! வல்வெட்டித்துறையில் சம்பவம்

வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் காதலியின் கழுத்தை வெட்டிய குற்றச்சாட்டில் காதலனான 20 வயதுடைய இளைஞனை வல்வெட்டித்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தன்னைக் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதாகக் கூறி கடந்த 25ம் திகதி யுவதியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன், யுவதியின் கழுத்தை வெட்டியதுடன், தன்னையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.
படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இளைஞன் சிகிச்சை பெற்று இன்று வீடு திரும்பியதை அடுத்து, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.