புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2015

சில்வா, மேத்யூஸ் அசத்தல்: வலுவான நிலையில் இலங்கை அணி

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் இருக்கிறது.
இலங்கை சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி,
3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நேற்று தொடங்கியது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
அதன் படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 138 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஹபீஸ் அதிகபட்சமாக 42 ஓட்டங்கள் எடுத்தார். பந்துவீச்சில் தரிந்து கவுஷால் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டுக்கு 70 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இதைத் தொடர்ந்து 2வது நாள் ஆட்டத்தில் இன்று இலங்கை அணி விளையாடியது.
இதில் கவுஷால் சில்வா 80 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அதே போல் அணித்தலைவர் மேத்யூஸ் 77 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சங்கக்காரா 34 ஓட்டங்களையும், தமிங்க பிரசாத் தன் பங்கிற்கு 35 ஓட்டங்களையும் எடுத்தார். பந்துவீச்சில் யாசிர் ஷா 5 விக்கெட் கைப்பற்றினார்.
இன்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 304 ஓட்டங்களை குவித்து 166 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ad

ad