புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2015

நடிகர் சங்க விவகாரங்களில் தவறு ஏதும் செய்யவில்லை: எங்கள் அணி வெற்றி பெறும்: மதுரையில் சரத்குமார் பேட்டி


நடிகர் சங்க விவகாரங்களில் தவறு ஏதும் செய்யவில்லை என்றும், எங்கள் அணி வெற்றி பெறும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் சங்கத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நடிகர் சங்கத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்றார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் சங்கத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நடிகர் சங்கத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. எங்களது தலைமையில் நடிகர் சங்கம் கட்டுக்கோப்புடன் தொடர்ந்து செயல்படும். நடிகர் சங்க தேர்தலை எதிர்ப்பவர்களின் பின்னணியில் அரசியல் இருப்பதாக தெரிகிறது. எங்கள் அணி வெற்றி பெறும் என்று நம்புகிறேன் என்றார்.

கேள்வி: நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்திருந்தால் அரசியல் தலையீடு இல்லாமல் இருந்திருக்குமே?

பதில்: நான் ஏற்கனவே தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சொன்னேன். நடிகர் சங்கத்துக்கு கட்டிடத்தை கட்டுக்கொடுத்துவிட்டு போங்கள் என்று சொன்னவுடன்தான் நான் உட்கார்ந்தேன். 

கேள்வி: சங்க உறுப்பினர்கள் பட்டியலை நீங்கள் வழங்கவில்லை என்று நடிகர் விஷால் கூறுகிறாரே?

பதில்: தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது. தேர்தல் அதிகாரியிடம் போய் கேட்க வேண்டும். நான் போய் எடுத்துக்கொடுக்க முடியுமா?

கேள்வி: தேர்தல் முடிந்தவுடன் நடிகர் சங்கம் மீண்டும் ஒற்றுமையாகிவிடுமா? தேர்தலுக்காகத்தான் இந்த பிரிவிணையா?

பதில்: நடிகர் சங்கம் ஒரு அரசியல் ஸ்தாபணம் அல்ல. இன்று கருத்து வேறுபாடுகள் உள்ளவர்கள், நாளைக்கு சகோதரர்களாக மாறுவார்கள். அப்படிதான் வரும். வேறு என்ன பண்ண முடியும். 

கேள்வி: நடிகர் மன்சூர் அலிகான் நாடக நடிகர்களை சங்கத்தில் சேர்த்தது தவறு என்று சொல்லியிருக்கிறார்?

பதில்: அவர் சரித்திரம் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர். ஆகியோர் நாடகத்தில் இருந்து வந்தவர்கள்தான் என்றார்.

ad

ad