புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2015

பிரெஞ்ச் பகிரங்கத்தில்; தோல்வி தரவரிசையில் நடால், 'ரபோவாவுக்கு பின்னடைவு


பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந் தது. ஆண்கள் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவும், பெண் கள் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் சம்பியன் பட்டத்தை கைப் பற்றினர். இதன் அடிப்படையில் டென் னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தர வரிசை பட்டியல் நேற்றுமுன்திம் வெளி யிடப்பட்டது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வின் நோவக் ஜோ
கோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பிரெஞ்ச் பகி ரங்கத்தில்; இறுதி ஆட்டத்தில் தோற்ற போதிலும் அவரது முதனிலை அரிய ணையை இப்போதைக்கு யாரும் நெருங் கும் தூரத்தில் இல்லை. ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 2-வது இடத்திலும், ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 3-வது இடத்திலும், நி'pகோரி (ஜப்பான்) 5-வது இடத்தி லும் தொடருகிறார்கள்.
பிரெஞ்ச் பகிரங்க முதல் முறையாக வென்று வரலாறு படைத்த வாவ்ரிங்கா 5 இடங்கள் உயர் ந்து 4-வது இடத்தை பிடித்துள்ளார். 'களிமண் தரை' போட்டியான பிரெஞ்ச் பகிரங்க 9 முறை பட்டம் வென்று அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய ஸ்பெயினின் ரபெல் நடால் இந்த தடவை அதிர்ச்சிகரமாக கால்இறுதியுடன் வெளியேற்றப்பட்டார்.
தொடர்ச்சியான தடுமாற்றத் தால் தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த அவர், பிரெஞ்ச் பகிரங்கத்தில் சறுக்கியதால் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடாலின் மோசமான தரவரிசை இதுவாகும். பெண்கள் ஒற்றையர் பிரிவில், 20-வது கிராண்ட்ஸ்லாமை வென்று 'வீறுநடை' நடை போட்டு வரும் அமெ ரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முதலிட சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துள் ளார்.
அதே சமயம் நடப்பு சம்பியன் அந்தஸ் துடன் பிரெஞ்ச் பகிரங்கத்தில் களம் இற ங்கிய ர'pயாவின் மரிய 'ரபோவா 4-வது சுற்றுடன் மண்ணை கவ்வியதால் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு சரிந்துள்ளார். செக்குடி யரசின் பெட்ரா கிவிடோவா 2 இடங்கள் ஏற்றம் பெற்று மீண்டும் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
பிரெஞ்ச் பகிரங்கத்தில்; யாரும் எதிர் பாராத வகையில் இறுதிசுற்று வரை முன் னேறிய செக்குடியரசின் லூசி சபரோவா 13-வது இடத்தில் இருந்து 7-வது இடத் திற்கு வந்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும். அத்துடன் இரு செக் குடியரசு வீராங்கனைகள் ஒரே நேரத்தில் முதல் 10க்குள் அங்கம் வகிப்பது 1989ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் தடவையாகும்.
3-வது இடத்தில் உள்ள சிமோனா ஹலேப் (ருமேனியா), 5-வது இடத்தில் உள்ள வோஸ்னி யாக்கி (டென்மார்க்) உள்ளிட்டோரின் வரிசையில் மாற்றமில்லை. பெண்கள் இரட்டையரில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தொடர் ந்து முதலிடம் வகிக்கிறார். பிரெஞ்ச் பகிரங்கத் தில்; அவரும், சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்சும் இணைந்து விளையாடினர்.

ad

ad