புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2015

ஐரோப்பாவால் மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத கிறீஸ்


எந்த கொம்பனாக இருந்தாலும் கடன் எடுத்தால் பயப்பட்டுத்தான் ஆக வேண்டும். இது ஒரு உலக மகா தத்துவம். தெரு முனையில் இருக்கும் பிச்சைக் காரனில் இருந்த உலகையே ஆளும் அமெ ரிக்காவரை இதே கதைத்தான். கடனெடுக்காத ஆளுமில்லை நாடுமில்லை.
தனி நபர் எடுக்கும் கடனுக்கு நாடுகள் எடுக்கும் கடனுக்கும் இடையில் பெரிதாக வித்தியாசம்
இல்லை. ஆனால் கடனெடுக்கும் தொகையும், அதனை அடைப்பதற்கு சொல்லும் வார்த்தைகளிலும்தான் வித்தியாசம் இருக்கிறது.
எப்படி இருந்தாலும் கிaஸ் நாட்டுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கக் கூடாது என்று அருகில் இருக்கும் நாடுகள் தலையில் கைவைத்து கவலைப்படும் அளவுக்கு அந்த நாடு கடனில் மூழ்கிவிட்டது. கிaஸை அதன் பண்டைய பெயரான கிரேக்கம் என்று சிலர் கெளரவத்தோடு அழைப்பார்கள். ஆனால் இப்போது கடன்காரா என்று பல வங்கிகளும் அருகில் இருக்கும் நாடுகளும் அழைக்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.
பெரிதாக ஒன்றுமில்லை, கிaஸ் நாடு எடுத்தி ருக்கும் கடன் அதன் வருமானத்தை விடவும் தலைக்கு மேல் அதிகம். ஒது தான் அந்த நாடு இப்போது சந்தித்திருக்கும் பொருளாதார நெருக் கடிக்கு அடிப்படை காரணம். கிaஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும் அது சுமக்கும் கடன் 177 வீதம் அதிகம். இந்த இலட்சணத்தில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 2010 ஆண்டியிலிருந்து 25 வீதமாக வீழ்ச்சி கண்டிருக் கிறது. இதனால் வேலையில்லாதோர் எண்ணிக்கையும் கிடு கிடுவென ஏறி 26வீதமாக உயர்ந்தது.
இந்த புள்ளி விபரங்கள் கிaஸ் சந்திக்கும் பிரச்சினையின் தீவிரத்தை புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கும். இந்த நிலையில் கிaஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் யூரோவில் இருந்து வெளியேற்றும் தறுவாயை சந்தித்திருக்கிறது.
மருந்தில்லாத ஆட்கொல்லி நோயால் சாகக் கிடப்பவன் ஒருவன் கப்பலில் ஏனையோருடன் இருந்தால் என்னவாகும். ஒன்றும் நடக்காது எல்லோரும் சேர்ந்து நோயால் சாவதற்கு முன்னரே அந்த ஆளை கடலில் வீசி கொன்று விடுவார்கள். கிaஸ் சந்திக்கும் நிலைமையைச் சொல்ல இத னைத் தவிர வேறு உதாரணம் கிடைக்கவில்லை. கிaஸென்பது சுகப்படுத்த முடியாத பொருளாதார நோயை கொண்ட நாடாக ஏனைய யூரோ நாடுகள் பார்க்கின்றன. எனவே அதனை கட லில் போட்டால்தான் எங்களால் தப்பிக்க முடி யும் என்று அவை நினைப்பத்தில் நியாயம் இல்லாமல் இல்லை.
என்றாலும் கிaஸிற்கு ஒட்சிசன் ஏற்ற யூரோவின் பிரதான நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ் போன்றவை இன்றும் கூட முயற்சித்து வருகின்றன. நடப்பு மாதமான ஜூன் கடைசிக்குள் சர்வதேச நாணய நிதியத்திற்கு (ஐ.எம்.எப்) கிaஸ் 1.5 பில்லியன் யூரோ செலுத்த வேண்டும். மறுபக்கம் அது வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன் 320 பில்லியன் யூரோ. இது தவிர கடனை அடைப்பதற்காக வாங்கிய தொலை 240 பில்லியன் யூரோ. ஜெர்மனியிடம் வாங்கிய கடன் 56 பில்லியன் யூரோ என்று கடனோ கடன்.
தனி நபரோ, நிறுவனமோ அப்படி இல்லை என்றால் ஒரு நாடோ திவாலாவது என்றால் தம்மிடம் இருக்கும் வருமானத்தை விடவும் கடன் அதிகம் என்று தான் அர்த்தம். அதாவது, ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை விடவும் கடன் அதிகம் என்றால் அந்த நாடு திவாலனதாக பொருள். அப்படி பார்த்தால் கிaஸையும் திவால் நாடு என்று பட்டப் பெயர் சொல்லி அழைக்க வேண்டும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் அதனை தடுப்பதற்கு கடனை அடைப்பதற்கான கடன் கொடுத்தது.
ஆனால் அப்படி யாரும் கடன்கொடுப்பதற்கான சும்மா பணம் கொடுக்க மாட்டார்கள். ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியமும் கடனை திருப்பி தருவதற்காக கட்டுப்பாடுகளை விதித்தது. இதனை அரசியல் மற்றும் பொருளாதார வார்த்தையில் சொல்வதென்றால் சிக்கன நடவடிக்கை  (Austerity) எனலாம்.
கடன் வாங்கிவன் சொல்லும் கசப்பான அறி வுறை தான் இந்த சிக்கன நடவடிக்கை. செலவை குறை, பணத்தை மிச்சம்வை, வாங்கிய கடனை வட்டியோடு கொடு என்பதுதான் அந்த அறிவுறை. கிaஸ¤ம் சொன்னபடி கேட்டு நாட்டு மக்களின் சலுகைகளை குறைத்து. பலரை வேலையிலிருந்து துரத்தி, சம்பளத்தை குறைத்து இல்லாத பொல்லாத அட்டகாசங்கள் செய்ய வெறுத்துப் போன மக் கள் கடந்த ஜனவரியில் நடந்த பொதுத் தேர்தலில் சிக்கன நடவடிக்கையை எதிர்க்கட்சிக்கு ஓட்டுப் போட்டு ஆட்சிக்கு அமர்த்தியது.
இப்படி வெற்றி பெற்று வந்த பிரதமர் அலக்சிஸ் டிசிபிரஸின் அரசு இப்போது சிக்கன நடவடிக்கையையும் நிறுத்த வேண்டிய ஆனால் கடன்களையும் செலுத்தி கடன் பிணை வழங்கியவர்களையும் சமாளிக்க வேண்டிய தலைகால் புரியாத நிலை க்கு ஆளாகி இருக்கிறது. இப்படியே போனால் கிaஸை யூரோ நாணயத்தில் இருந்து துரத்த வேண்டியதுதான் என்று ஏனைய யூரோ நாணய நாடுகள் பயத்தில் உலருகின்றன. யூரோ இன்றி எம்மால் வேறு ஒரு நாணயத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று கிaஸ் மறுபக்கம் இருந்து புலம்புகிறது.
கடன்களை வாரி வழங்கும் வள்ளல்களான வங்கிகள் நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதை விடவும் நாடுகளுக்கு கொடுப்பதற்கு தயக்கம் காட்டுவதில்லை. ஒரு நிறுவனம் திவாலாகி விட்டால் கொடுத்த கடன் அம்போவாகி விடும். ஆனால் நாடு என்பது அப்படி அல்ல. சொன்ன நேரத்தில் கடனை திருப்பி தராவிட்டாலும் அதட்டி கேட்கப்போவதில்லை.
அரசொன்று தனது நாட்டில் அன்று பிறக்கும் குழந்தைகள் உட்பட தனது பிரஜைகளை அடமானம் வைத்துத்தான் கடன் வாங்க கையேந்துகிறது. எனவே வரி செலுத்தும் உண்மையான ஒவ்வொரு பிரஜையும் நல்லபடியாக எமது கடனை நூற்றாண்டு கழித்தாவது அடைத்து விடுவார்கள் என்று அந்த வங்கிகள் நம்புகின்றன.
இப்படியான கடனுக்கு செலுத்தும் வட்டிகளால்தான் வங்கிகளின் சொத்துகள் அதிகரிக்கின்றன. எனவே கடன் கொடுக்கக் கொடுக்க இலாபம் என்று வங்கிகளும் கடன் கொடுத்துகின்றன. ஏழைப் பணக்கார நாடு என்று பேதமின்றி எல்லா நாடுகளும் கடன் எடுத்து வருகின்றன. கிaஸ¤க்கும் இப்படித்தான் ஆனது. உருப்படியான பொருளாதார திட்டம் இன்றி கடன் மேல் கடன் எடுக்க கடைசியில் திருப்தி கொடுக்க வழியில்லாமல் போனது.
இப்படி பொருளாதார நெருக்கடி தீவிரமாகும்போது அது சமூக மற்றும் அரசியல் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால்தான் கிaஸில் தற்கொலை எண்ணிக்கை என்றும் இல்லாமல் அதிகரித்து. விபச்சாரம், கொள்ளை என்று சீர்கேடுகளுக்கு பஞ்சம் இல்லை.
இப்படியான சிக்கலான சூழலில் மக்கள் அரசியல் புரட்சி கூட செய்ய பார்ப்பார்கள். அப்போது ஒரு சர்வாதிகாரிகூட ஆட்சிக்கு வர முடியும். இப்படித்தான் இரண்டாவது உலகப் போருக்கு முன்னரும் ஐரோப்பாவின் சூழல் இருந்தது. அந்த பிரச்சினைகள் பெற்றடுத்த பிள்ளைதா¡ன் ஜெர்மனி சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லர்.
கடந்த கால வரலாறு எல்லாம் ஐரோப்பிய நாடுகளுக்கு தெரியாமல் இல்லை. அதனால்தான் கிaஸை தூக்கி நிறுத்த யூரோ நாடுகள் பாடாய் பாடுபடுகின்றன. கிaஸ் விழுவதென்றால் அது முழு ஐரோப்பாவினதும் வீழ்ச்சி புள்ளியாகவே இருக்கும்.

ad

ad