புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2015

பொதுத் தேர்தலில் ஐ.தே.க தனித்தே போட்டியிடும்


* பிரதமர் ரணில் தலைமையிலான கட்சியின் செயற்குழு ஏகமனதாக முடிவு
* வேட்புமனு குழுவை நியமிக்கும் அதிகாரமும்
பிரதமருக்கு வழங்க தீர்மானம்
இதன் மூலம் சிறுபான்மைக் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று முற்பகல் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற இச் செயற் குழுக் கூட்டம் சுமார் இரண்டரை மணித்தியாலங் கள் நீடித்தது.
மேற்படி கூட்டத்தினையடுத்து அதில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கல்வியமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் ஊடகங்களுக்கு வெளியிட்டார்.
நேற்றைய இக்கூட்டத்தின் போது எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களைத் தெரிவு செய்யும் வேட்பு மனுக் குழுவை நியமிக்கும் அதிகாரத்தை கட்சியின் செயற்குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கியுள்ளது.
எதிர்வரும் சில தினங்களில் பாரா ளுமன்றம் கலைக்கப்படலாம் என நம் பிக்கை வெளியிட்டுள்ள ஐ. தே. க. செயற் குழு, பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் நாடெங்கிலுமிருந்து மக்களை கொழும்பிற்கு வரவழைத்து கட்சியின் மாநாடு கொழும்பில் நடத்தவும் தீர்மானித்துள்ளது.
பொதுத் தேர்தலில் அமோக வெற்றிபெறும் நோக்கிலேயே மக்களை ஒன்று திரட்டும் இச் செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது. மேற்படி சம்மேளனம் மற்றும் தேர்தல் செயற் பாடுகளுக்கான ஏற்பாட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தின் போது தேர்தலுக்குத் தயாராவது தொடர்பிலும் கட்சியை மென்மேலும் பலப்படுத்துவது தொடர்பிலும் செயற்குழுவினால் விரிவாக ஆராயப்பட்டது.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு எதிராக எதிர்க் கட்சி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் வாங்கச் செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. (ஸ)

ad

ad