புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2015

எங்கள் காணிகளில் விகாரை வேண்டாம்; உணவு தவிர்ப்பிலிருந்த மூவர் பொலிஸாரால் கைது

முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று அடையாள உணவு
தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட காணி உரிமையாளர்கள் மூவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அனுமதி பெறாமல் அவற்றை முன்னெடுத்ததாகக் கூறியே மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் கூறினர். 
 
கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய  கிராம மக்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் செய்வதுடன், காணி உரிமையாளர்களான யோகராசா ஜூட் நிமலன், திருஞானசம்பந்தர் மணிவண்ணதாஸ், எஸ்.சிவலோகேஸ்வரன் ஆகியோர் அடையாள உண்ணாவிரதத்திலும் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தனர். 
 
அதற்கிணங்க மூன்று காணி உரிமையாளர்களும் காலை 7 மணிக்கு விகாரை அமைக்கப்படும் இடத்துக்கு முன்பாக வந்து அமர்ந்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 
 
அங்கு வந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர். முல்லைத்தீவு கொக்கிளாய் வைத்தியசாலை காணியின் ஒரு பகுதியையும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் இணைத்து பிக்கு ஒருவரால் இராணுவத்தினரின் துணையுடன் இந்த விகாரை அமைக்கப்படுகின்றது. 
 
இவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து உணவு தவிர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும்  விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்படவிருந்த கண்டனப் போராட்டமும் கைவிடப்பட்டு, அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

ad

ad