செவ்வாய், ஜூன் 23, 2015

கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் எதிர்பார்த்தபடி ஆனந்தி இல்லை மாறாக மறைந்த ரவிராஜின் மனைவியா

கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டில் குழப்பம்  தற்போது யாழ்மாவட்ட ஆசனப்பகிர்விலேயே கூட்டமைப்பு அதிக சிக்கல்ப்படுவதாக தெரிகிறது.

இம்முறை யாழில் மொத்தமாக ஏழு ஆசனங்கள்தான் என கூறப்பட்டு வரும் நிலையில் 10 வேட்பாளர்களை தயார் செய்ய வேண்டிய நிலையில் கூட்டமைப்பு உள்ளது.
இதனை அங்கத்துவக்கட்சிகளிற்கிடையில் எப்படி பிரிப்பதென்பதில் முதல் சிக்கல் நீடிக்கிறது.
தமிழரசுக்கட்சி தமக்கு ஏழு ஆசனங்கள், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ என்பன தலா ஒவ்வொன்றை எடுக்குமாறு கூறியுள்ளது.
எனினும், ஈ.பி.ஆர்.எல்.எவ் இதற்கு சம்மதிக்கவில்லை. அவர்கள் இரண்டு ஆசனங்கள் என்பதில் விடாப்பிடியாக நிற்கிறார்கள்.
இதனால் தமிழரசுககட்சி தனது பங்கிலிருந்து ஒன்றை விட்டுக் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதேவேளை கூட்டமைப்பிற்கு தலையிடியாக உள்ள இன்னொரு விடயம், வேட்பாளர் தேர்வில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக இருக்க வேண்டுமென்ற சிவில் அமைப்புக்களின் வலியுறுத்தல். இந்த வலியுறுத்தல் கூட்டமைப்பிற்கு வேப்பங்காயாக உள்ளதாக தெரிகிறது.
கூட்டமைப்பின் சார்பில் வழக்கமாக களமிறங்கிய, களமிறங்கும் ஒரு அணியுள்ளது.
இந்தநிலையில் பெண்களின் பங்களிப்பை வலியுறுத்துவது கூட்டமைப்பிற்கு உவப்பானதாக இருக்கவில்லை.
இறுதியாக கூட்டமைப்பின் தலைவர்கள எடுத்த முடிவின்படி சில பெண் வேட்பாளர்களை நிறுத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பில் வைத்து கூட்டுக் கொல்லப்பட்ட எம்.பி ரவிராஜின் மனைவியை களமிறங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
????????????????????????????????????