புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2015

வருட இறுதியில் புலம்பெயர்ந்தோர் விழா!- இலங்கை அரசாங்கம் அறிவிப்பு


இந்த வருட இறுதியில் அரசாங்கம், புலம்பெயர்ந்தோர் விழாவை நடத்தவுள்ளதாக வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது
நல்லிணக்க முனைப்பின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வாராந்த செய்தியாளர் சந்திப்பில் இன்று உரையாற்றிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலன்னே, இந்த விழாவின் மூலம் புலம்பெயர்ந்தோரின் நல்லெண்ணத்தை இலங்கையின் அபிவிருத்திக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார்
புலம்பெயர்ந்த இலங்கையர்களில் புத்திஜீவிகள் மற்றும் நிபுணர்கள் நாட்டுக்கு வர விரும்புகின்றனர்
அவர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு துணையாக இருப்பர். இதன் ஒரு கட்டமாக கடந்த வாரம் புலம்பெயர்ந்தோர் அமைப்புக்களுடன் சந்திப்பு இடம்பெற்றது
இதில், அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்றார் என்றும் கொலன்னே குறிப்பிட்டார்.
இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை புலம்பெயர்ந்தோருடன் இணைந்து நடைமுறைப்படுத்தி இறுதி சமாதானத்தை அடைய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கிறது என்றும் கொலன்னே குறிப்பிட்டுள்ளார்

ad

ad