புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2015

இலங்கையில் அரசு வேறு இராணுவம் வேறு என்ற நிலையில் தான் ஆட்சி நடக்கிறதா?


சிங்கள அரசுக்கு அடங்காமல் "நாம் அரசை உற்று நோக்கி கொண்டு இருக்கின்றோம்!" என இராணுவம் அறிக்கை விடுகின்றது
என்றால் இலங்கையில் அரச கட்டுப்பாட்டில் இராணுவம் இயங்குகின்றதா? இல்லை இராணுவ கட்டுப்பாட்டில் தான் அரசு இயங்குகின்றதா?
புலம்பெயர் தமிழர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்களை "வெளியில் இருந்து தாம் கவனித்து வருவதாக" சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர,
“வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புலம்பெயர்ந்தோரை சந்தித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களுடன் அரசாங்கம் நடத்திய பேச்சு வார்த்தையை நாம் வெளியிலிருந்து கவனித்து வருகிறோம். நாம் இந்த பேச்சுக்களில் பங்கேற்கவில்லை.
வடக்கிலிருந்த 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்த குற்றச்சாட்டு தவறானது.
2009 ஏப்ரல் முதல் 2014 வரையான காலத்திலே இந்த இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டன. இவை சிறிய முகாம்களாகும்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், எந்த முகாமும் அகற்றப்பட வில்லை.
வெறுமனே இராணுவம் பயன்படுத்திய ஆயிரம் ஏக்கர் காணிகள் மட்டுமே மக்களிடம் கையளிக்கப்பட்டதே இந்த அரசில் நடந்தது” என்றும் அவர் தெரிவித்தார்.
எனின் இவரே அரசின் வண்டவாளதிற்கு காட்டி கொடுத்து சாட்சி கூறுகின்றாரா? இல்லை மகிந்தவுக்கு தேற்றம் சொல்கிறாரா?
தமிழர்களின் சுமார் 65,000 ஏக்கர் நிலங்களை சிங்கள இராணுவம் அபகரித்துள்ள நிலையில் புதிய அரசு உலகிற்கு காணிகளை திருப்பி கொடுக்கின்றோம் என நாடகமாடி வெறுமனே 1000 ஏக்கர் நிலத்தை திருப்பி கொடுத்துள்ளார்கள்.
அதிலும் அவற்றுள் 500 ஏக்கர் நிலம் மக்கள் குடி அமர முடியாத தரிசு காணி என மக்கள் அழுது கதறுகின்றனர்.
அரசு ஒரு புறம் நல்லிணக்க நாடகத்தை இப்பொழுது சர்வதேச அரங்கத்தில் நடித்துக் கொண்டு இருக்கின்றது. மறுபுறம் இராணுவம் அரசு எதையும் வெட்டி பிடுங்கவில்லை என சாட்சி கூறுகின்றதா? இல்லை எவராலும் எம்மை தட்டிக் கேட்க முடியாது என வீரம் பேசுகின்றதா?
இலங்கையில் போர் ஓய்ந்தது என சிங்கள அரசினர் சொல்கிறார்கள். இன்னமும் இராணுவ முகாம்கள் ஒன்றை கூட மூடவில்லை என மார் தட்டும் சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து எம் மக்களை விடுவிக்க முடியாத சிங்கள அரசு என்ன பேச்சுவார்த்தையை தமிழர்கள் தரப்போடு செய்ய முடியும்?
புலம் பெயர் தமிழர்களோடு சிங்கள அரசினர் பேசினார்களாம். அதை இவர்கள் வெளியே இருந்து பார்கின்றார்கலாம்.. யார் பேசினார்கள்? யாரோடு பேசினார்கள்? ஒரு சில நபர்களோடு பேசுவது யாருக்கும் தெரியாமல் பேசுவதற்கு பெயர் தான் பேச்சு வார்த்தையா? பேரம் இல்லாமல் ஆமாம் சாமி என ஒத்து ஊதுவதற்கு வேறு பெயர்.
இன்னும் என்னென்ன நாடகங்களோ...

ad

ad