புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2015

உலககொக்கி லீக்: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் சமநிலை



உலக ஆக்கி லீக் இரண்டாவது  சுற்று போட்டிகள் பெல்ஜியத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஏ பிரிவில் வெள்ளிக்கிழமை இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் மோதியது.

13-வது நிமிடத்தில் இந்திய வீரர் ரமன்தீப்சிங் கோல் அடித்தார். 23-வது நிமிடத்தில் கோல்பகுதியில் வைத்து இந்திய வீரரின் காலில் பந்து பட்டதால், பாகிஸ்தானுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை பாகிஸ்தானின் முகமது இம்ரான் கோலாக மாற்றினார். 37வது நிமிடத்தில் முகமது இம்ரான் இன்னொரு கோல் போட்டார். 39-வது நிமிடத்தில் ரமன்தீப்சிங் மீண்டும் ஒரு கோல் அடித்து சமனுக்கு கொண்டு வந்தார். 

மேற்கொண்டு கோல் எதுவும் விழாததால் பரபரப்பான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஏற்கனவே கால்இறுதியை உறுதி செய்து விட்ட இந்திய அணி 7 புள்ளிகளும் (2 வெற்றி, ஒரு டிரா), பாகிஸ்தான் 4 புள்ளிகளும் (ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா) பெற்றுள்ளன. இந்திய அணி தனது கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவை சனிக்கிழமை சந்திக்கிறது.

ad

ad