செவ்வாய், ஜூன் 23, 2015

விஜய் டிவியில் திவ்யதர்ஷினி இல்லை: வெளியேறினாரா... வெளியேற்றப்பட்டரா?


விஜய் தொலைக்காட்சியில் இருந்து நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்டவர் தொகுப்பாளினி டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் 'காபி வித் டிடி' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம்.

இந்த நிலையில், அண்மையில் விஜய் தொலைக்காட்சி நடிகர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றை நடத்தியது. இந்த விழாவில் கோபிநாத், திவ்யதர்ஷினி ஆகியோர் தொகுப்பாளர்களாக இருந்தனர். அப்போது, திவ்யதர்ஷினி நிகழ்ச்சியை சொதப்பியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், திவ்யதர்ஷினியை நீக்க தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்ததாகவும், இதனை முன்கூட்டியே தெரிந்து கொண்ட டிடி, அதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், டிடிக்கும் இடையே எந்த மனவருத்தமும் இல்லை என்றும், டிடி கர்ப்பமாக இருப்பதால்தான் அவர் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறியதாகவும் இன்னொரு தகவல்
கூறுகிறது