புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2015

சகல கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையாளர் அழைப்பு


எதிர்வரும் யூலை மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடலில் அனைத்துக் கட்சிகளின் செயலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்துள்ளார். 
 
பொதுத் தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வார காலத்துக்குள், தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டும் என்பது தேர்தல் சட்டமாகும். 
 
அதேபோன்று, கட்சிகளின் தற்போதைய சின்னங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதாயின் அதனையும், அந்த ஒரு வார காலத்துக்குள்ளேயே மேற்கொள்ள வேண்டும். 
 
இவ்விடயங்கள் தொடர்பிலும் மேலும் சில விடயங்கள் குறித்தும், மேற்படி கலந்துரையாடலின் போது ஆலோசிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் மேலும் தெரிவித்தது. 
 
ஓகஸ்ட் 17 ஆம் திகதி  நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் யூலை 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ad

ad