புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2015

சின்னங்களை மாற்ற விரும்பினால் மாற்றலாம்; தேர்தல் செயலகம் அறிவிப்பு

 நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகள் தமது சின்னங்களை மாற்றுவதாயின் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர்
அறிவிக்க வேண்டுமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
 
1981ஆம் நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 12.1ஆம் பிரிவுக்கமைய இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். எம். மொஹமட் தெரிவித்தார். 
 
சின்னங்களை மாற்றுவது தொடர்பான குறித்த அறிவிப்புக்கள் கட்சியின் செயலாளர் ஊடாக எழுத்து மூலமாக தேர்தல்கள் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் .
 
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுக்கள், ஏற்கனவே கட்டுப்பணத்தை செலுத்த ஆரம்பித்துள்ளன. அதற்கமைய கட்டுப்பணத்தை அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை செலுத்தலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad