புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2015

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து திங்கட்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா மேல் முறையீடு



வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட  சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக
முதலமைச்சர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு கடந்த மாதம் 11–ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா ஆகியோர் மட்டுமின்றி தமிழக எதிர்க்கட்சிகளும் வந்தன.  இந்த நிலையில் கர்நாடக மாநில அமைச்சரவை முதல்வர் சித்தராமையா தலைமையில் கூடி ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆச்சார்யாவுக்கு உதவ வழக்கறிஞர் சந்தேஷ் சவுடாவையும் கர்நாடக அரசு நியமித்துள்ளது. இவ்வழக்கில், அரசு வழக்கறிஞராக ஐகோர்ட்டில் ஆஜரான ஆச்சாரியாவையும், அவரின் உதவிக்காக வழக்கறிஞர் சந்தேஷ்சவுட்டாவையும் சுப்ரீம் கோர்ட்டிலும் தொடரச் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்கான அரசாணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு தொடரும் வழக்கு என்பதால், இந்த அரசாணை அவசியமாகும். 

தற்போது அந்த மேல் முறையீட்டு மனு டெல்லி கொண்டு செல்லப்பட்டு சட்ட நிபுணர்களால் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் திங்கட்கிழமை (22- தேதி) கர்நாடகா அரசு தரப்பில் அந்த மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.

ad

ad