புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2015

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் பிரேசில்–செர்பியா

20–வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (20 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரண்டு
அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலாவது அரை இறுதிப்போட்டியில் பிரேசில்–செனகல் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணி 5–0 என்ற கோல் கணக்கில் செனகலை எளிதில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 5–வது நிமிடத்தில் பிரேசிலுக்கு முதல் கோல் வந்தது. பிரேசில் அணி வீரர் ஜோ பெட்ரோஸ் அடித்த பந்தை செனகல் வீரர் அன்டெலின் கார்ரியா தடுக்க முயல அது அவரது காலில் உரசிய படி சுய கோலாக மாறியது. பிரேசில் வீரர்கள் மார்கோ குல்கெர்மே 7–வது நிமிடத்திலும், 78–வது நிமிடத்திலும், கேப்ரியல் போஸ்ஷிலி 19–வது நிமிடத்திலும், ஆலிவரோ ஜோர்ஜ் 35–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். செனகல் அணியால் கடைசி வரை பதில் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை.
மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் செர்பியா–மாலி அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. செர்பியா அணி வீரர் ஆன்ட்ரிஜா ஜிவ்கோவிச் 4–வது நிமிடத்தில் கோல் அடித்தார். மாலி அணி வீரர் யோசோப் கோன் 39–வது நிமிடத்தில் 30 அடி தூரத்தில் இருந்து பதில் கோல் திருப்பினார். வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் சமநிலை வகித்தால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் (101–வது நிமிடம்) செர்பியா அணியின் மாற்று ஆட்டக்காரர் இவான் சபோன்ஜிச் கோல் அடித்தார். இதன் மூலம் செர்பியா அணி 2–1 என்ற கோல் கணக்கில் மாலியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மாலி அணி வீரர் யோசோப் கோன் (114–வது நிமிடம்) கூடுதல் நேரத்தில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
வருகிற 20–ந் தேதி ஆக்லாந்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரேசில்–செர்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன

ad

ad