புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2015

பார்த்தசாரதி கோயிலுக்கு ஜெ. நாளை வருகையா? ஜொலிக்கும் திருவல்லிக்கேணி!


 சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலுக்கு முதல்வர் ஜெயலலிதா நாளை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருவல்லிக்கேணி பகுதி ஜொலி ஜொலித்து காணப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிடித்தமான கோயில்களில் முதன்மையானது திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில். அங்கு நாளை கும்பாபிஷேகம்  நடைபெறவிருப்பதால் திருப்பணி வேலைகள் ராக்கெட் வேகத்தில் நடைபெற்று வ
ருகின்றன.

மேலும், திருக்கோயிலின்  உட்புற மற்றும் வெளிப்புற கட்டமைப்புப் பணிகள் மற்றும் பெயிண்ட் பூச்சு வேலைகள் அனைத்துமே முதல்வர் ஜெயலலிதாவை மனதில் வைத்தே பணிகள் ஜரூராக நடந்த வண்ணம் இருக்கிறது.

இந்த வேலைகள் அனைத்தையும் அப்பகுதி கவுன்சிலர் எம்.ஜி.ஆர் வாசன் சில தினங்களாக பரபரப்புடன் பார்த்து வருகிறார். கோயிலை சுற்றியுள்ள நான்கு மாடவீதிகளிலும் புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு முன் சுடச்சுட தார் ரோடுகள் போடப்பட்டுள்ளன. கோயிலுக்கு எதிரே உள்ள ஆண்டாள் நீராட்டு மண்டபத்தை பழங்காலத் தோற்றத்திற்கு கொண்டுவரும் வகையில் சுற்றியிருந்த அனைத்து குட்டிக் கடைகளும் வலுக்கட்டாயமாக காலி செய்ய வைத்துள்ளனர்.

மேலும், அவர்களை சமாதானப்படுத்துவதற்கு வேறு ஏற்பாடுகள் செய்து தருவதாக உறுதி அளித்திருக்கின்றனர். முழுக்க முழுக்க முதல்வரின் வருகையை எதிர்நோக்கி வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதால் இன்று இரவோ அல்லது நாளை அதிகாலையிலோ ஜெயலலிதா வருகை இருக்கும் என சுற்றுவட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கம் போல் காவல்துறையினரின் கெடுபிடிகள் திருவல்லிக்கேணி பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்திருக்கின்றன. சில சாலைகள் திடீர் ஒன்வேக்களாக மாற்றப்பட்டிருப்பதால் வாகன நெரிசலில் சிக்கி அள்ளாடுகிறது திருவல்லிக்கேணி.

ad

ad