வியாழன், ஜூன் 11, 2015

ஐரிஷ் நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்டது “நோ பயர் சோன்”


இலங்கையின் இறுதிப்போர் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணப்படம் நேற்று ஐரிஷ் நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது
நோ பயர் சோன் என்ற இந்த ஆவணப்படம் நேற்று மாலை காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தில் இலங்கைப் படையினர் இறுதிப்போரின்போது மேற்கொண்ட மனித உரிமைமீறல்கள் காணப்பிக்கப்படுகின்றன.
இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டபோது படத்தின் இயக்குநர் கெலம் மெக்ரே, இலங்கையில் இருந்து வெளியேறிய ஊடகவியலாளர் ரோஹித்த பாசன அபேவர்த்தன உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்பின்னர் ஆவணப்படத்தை பார்த்தோர், இலங்கையின் நிலைமை மற்றும் நாட்டில் இடம்பெற்ற போர் தொடர்பிலான சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென கலந்துரையாடினர்.