புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2015

வனவிலங்கு பூங்காவில் காரின் ஜன்னலை திறந்து வைத்திருந்த பெண்: உள்ளே புகுந்து கடித்து குதறிய சிங்கம்( வீடியோ இணைப்பு)


தென் ஆப்பிரிக்காவில் வனவிலங்கு பூங்காவை பெண் ஒருவர் சுற்றிப்பார்த்துகொண்டு இருந்துபோது திறந்திருந்த காரின் ஜன்னல் வழியாக உள்ளே புகுந்த சிங்கம் அவரை கடித்து சாகடித்தது.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்(Johanessburg) நகரில் உள்ள ஹனிடியூ(Honeydew) பகுதியில் சிங்கங்களுக்கான வனவிலங்கு பூங்கா உள்ளது.
உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் காரில் இருந்தவாறு சிங்கங்களை பார்த்து ரசித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது காரில் ஜன்னலை மூடாததால் அதன் வழியாக சிங்கம் ஒன்று காரின் உள்ளே பாய்ந்தது. பின்னர் அந்த பெண்ணை கடித்து குதறியது.
காரை ஓட்டி வந்த ஓட்டுனரையும் சிங்கம் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு மாதங்களில் இந்த பூங்காவில் மிருகங்களால் நிகழ்ந்த 3வது தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வனவிலங்கு பூங்கா நிர்வாகத்தினர் கூறுகையில், இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. எனினும் இது தொடர்பாக வனவிலங்கு பூங்காவை மூடவோ சிங்கங்களை அழிக்கவோ முடியது.
பார்வையாளர்கள் தான் தக்க பாதுகாப்புகளோடு செல்லவேண்டும். அவர்கள் தங்கள் காரின் ஜன்னலை சரியாக மூடும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த 2014 ஆண்டு இதே பூங்காவில் சிங்கம் ஒன்று பார்வையாளரின் கார் கதவை திறக்க முயற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிவருகிறது.

ad

ad