புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2015

விஷால் அணி தொடர்ந்த வழக்கில்: நடிகர் சங்க தேர்தலை அறிவிக்கபட்ட தேதியில் நடத்த தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு


தென் இந்திய  நடிகர் சங்க தேர்தல்  15.7.2015 அன்று வடபழனியில் உள்ள என்.எஸ்.கிருஷ்ணன் சாலையில் உள்ள
திரைப்பட  இசையமைப்பாளர் சங்க  அலுவலகத்தில்  நடிபெறும் எனவும்  தேர்தல் அதிகாரிகளாக  வழக்கறிஞர் ஜெ. செல்வராசன், துணை தேர்தல் அதிகாரியாக வழக்கறிஞர் ஜேம்ஸ் அமுதன் ஆகியோர் இருப்பர் எனவும் அறிவிக்கபட்டது

இதை எத்ர்த்து நடிகர் சங்க தேர்தலி அறிவிக்கபட்ட தேதியில் நடத்த தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில், நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த  மனுவில் 

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்துக்கு வருகிற ஜூலை 15-ந் தேதி, புதன்கிழமை நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக திரைப்படம் தொடர்பான தொழிற் சங்கங்களுக்கு மாதத்தின் 2-வது ஞாயிற்றுக் கிழமைதான் தேர்தல் நடத்தப்படும்.

அப்போதுதான், திரைப் பட துறை தொழிலாளர் கள் விடுப்பில் இருப்பார்கள் என்பதால், இந்த நடைமுறை பல காலமாக கடை பிடிக் கப்பட்டு வருகிறது. எனவே, நடிகர்கள் சங்கத்தின் தேர்தலை ஜூலை மாதம் 2-வது ஞாயிற்றுக் கிழமை நடத்த உத்தரவிட வேண்டும்.

இந்த தேர்தலை நடத்த 2 வக்கீல்களை தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் அறிவித் துள்ளது. எனவே, ஐகோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து, இந்த தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும், தேர்தலில் போட்டி யிடுபவர்களுக்கு, வாக்காளர் கள் பெயர் பட்டியலை வழங்கவும் நடிகர்கள் சங்கத்துக்கு உத்தரவிட வேண்டும்.
என்று  கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது  மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்த்தின் பொதுச் செயலாளர் ராதாரவிக்கு நோட்டீசு அனுப்ப உத்தர விட்டார்.இந்த வழக்கு நீதிபதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராதாரவி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 
 
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்துக்கு மாதத்தில் 2-வது ஞாயிற்றுக் கிழமைதான் தேர்தல் நடத்த வேண்டும் என்று எந்த ஒரு சட்டமும், விதியும் இல்லை.
சங்கத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் வேலை நாள் என்று பொருட்படுத்தாமல் வந்து ஓட்டு போடுவார்கள். இதற்காக விடுமுறை நாளில் தான் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூற முடியாது.

தற்போது தேர்தல் நடைபெற உள்ள வடபழனியில் இசையமைப் பாளர் சங்கத்தின் அலுவலகத்தில் எல்லா வசதிகளும் உள்ளது. 7 கிரவுண்டுக்கு மேல் நிலம் அங்கு உள்ளதால், கார் நிறுத்த போதிய இடவசதி உள்ளது. மேலும், இந்த தேர்தல் நடைபெறும் இடத்துக்கு அருகே ஏ.வி.எம்.ஸ்டூடியோ உள்ளதால், அங்கும் கார்களை நிறுத்த போதிய வசதிகளை செய்து தரப்படும்.

எனவே, தேர்தலை வேறு ஒரு இடத்தில் நடத்த வேண்டும் என்று மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நேற்று 25-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று இருதரப்பு வக்கீல்கள் வாதங்களை கேட்கப்படும் என்று உத்தரவிட்டார். அதன்படி நேற்று இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில்  நடிகர் சங்க தேர்தல் அறிவிக்கபட்ட தேதியில் நடத்த இடைக்கால  தடை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.

ad

ad