புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2015

முதலமைச்சர் CV எமக்குக் கிடைத்த சொத்து; எங்களை எவராலும் பிரிக்க முடியாது


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக் குழு கூட்டத்தினைக் கூட்டி வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் வட மாகாண சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் சேர்ந்து இயங்க கூடிய வலுவான கட்டமைப்பு ஒன்றினை தற்போது உருவாக்க முன்வந்துள்ள எமது தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களுக்கு எனது நன்றியினையும்
பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிaதரன் தெரிவித்துள்ளார்.
எப்போதும் எந்த வேளையிலும் அனைத்து விடயங்களிலும் வட மாகாண முதலமைச்சருடன் சேர்ந்து இயங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள எமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு என்றும் பக்கபலமாக இருப்பேன் எனத் தெரிவித்துள்ள சிaதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் எந்தவொரு பிளவும் இல்லையெனவும் தமிழரசுக் கட்சியினர் வட மாகாண முதலமைச்சருடன் புரிந்துணர்வு அடிப்படையிலும் வலுவான ஒற்றுமையுடனும் செயற்பட்டு வருகிறார்கள் எனவும் முதலமைச்சரையும் எங்களையும் எவராலும் பிரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எமக்கும் எமது மக்களுக்கும் கிடைத்த பெரும் சொத்தாகும். வெளிப்படைத் தன்மையுடனும் யாருக்கும் அஞ்சாது தமிழ்த் தேசியத்தின் கொள்கைகளை எங்கேயும் எவ்வேளையிலும் ஆணித்தரமாக தெரிவிக்கக் கூடியவர் என்பதை அனைவரும் அறிவர் எனவும் அவர் கூறினார்

ad

ad