புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2015

“EPRLF” சுரேசிற்கு அடி பணிந்த தமிழரசுக் கட்சி.சட்டத்தரணி தவராசாவை யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இணைக்கும் படி ஊர்காவல் துறை தமிழரசுக் கட்சிக் கிழை அழுத்தம் கொடுக்கும் நிலையில் அந்த விடயத்தை தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் விரும்பவில்லை


நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வரலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் கூட்டமைப்பில் கதிரைகளை
கைப்பற்ற போட்டிகள் உச்சமடையத் தொடங்கியுள்ளன.
யாழ்.மாவட்டத்திற்கென உள்ள 10 வேட்பாளர்களில் சுரேஸ் தரப்பு இரு சீற்களை பெற்றுள்ளது. அதில் ஒன்றில் சுரேஸ் களமிறங்குகின்ற போதும் மற்றைய வேட்பாளர் பற்றி தகவல்கள் இல்லை.
புளொட் சார்பில் சித்தார்த்தனும் டெலோ சார்பில் சிறீகாந்தாவும் களமிறங்க திட்டமிட்டுள்ளனர். தமிழரசுக்கட்சிக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் மாவை, சுமந்திரன், சிறீதரன் மற்றும் சரவணபவன் களமிறங்கவுள்ளனர். விநாயகமூர்த்தி யாழில் தங்கியுள்ள போதும் அவரிற்கு இடமுண்டாவென்பதில் கேள்வி தொடர்கின்றது.
வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி ஊடகங்களது ஆதரவை முற்றாக இழந்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஊடகம் சுட்டிக் காட்டியுள்ளது.
குறிப்பாக அனந்தியின் தனிப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவரை அண்மை நாட்கள் செயற்பாடகளை மேலும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது வழிநடத்தும் தென்னிலங்கை நபர்கள் தொடர்பிலான சந்தேககங்கள் ஊடகவியலாளர்கள் அவரை புறக்கணிக்க காரணமாயிருக்கின்றது.
அவரும் ஊடகங்களை விட்டுவிலகி உள்ளமை அதனை உறுதிப்படுத்துவதுவதாக மேலும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள நிலைவரப்படி சுரேஸ்வசமுள்ள ஒரு சீற்றும் தமிழரசுக்கட்சி வசமுள்ள இருசீற்றும் யாருக்கென்ற கேள்வியே பலதரப்புக்களிடமும் எழுந்துள்ளது.
சுரேஸ் யார்..? இவரின் செயற்பாடு என்ன..! என்பது வட-கிழக்கு மக்களுக்கு நன்கு புரியும். இவரை புலிகளின் தலைவர் கூட்டமைப்பில் இணைத்ததே மகா தவறு, அதற்காக கொள்கையில்லாத தமிழரசுக் கட்சி இரண்டு ஆசனம் தருவதாக கூறியதாம்…? பல படித்த கல்விமான்களை விரும்பாத தமிழரசுக் கட்சி கொலைகாறர்கள் மூலம் அரசியல் செய்வது மக்களிடம் பாரிய எதிர்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மக்களால் அதிகம் எதிர்பாற்கப்படும் சட்டத்தரணி தவராசாவை யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இணைக்கும் படி ஊர்காவல் துறை தமிழரசுக் கட்சிக் கிழை அழுத்தம் கொடுக்கும் நிலையில் அந்த விடயத்தை தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் விரும்பவில்லை என்பதுடன் அவரை தமிழரசுக் கட்சியை விட்டு அகற்றுவதில் தமிழரசுக் கட்சியின் முக்கிய புள்ளி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆதங்கப்பட்டுள்ள ஊர்கவல் துறை தமிழரசுக் கட்சிக் கிழை, துறை சார் மனிதர்களை கூட்டமைப்பு நிராகரிப்பது மீண்டும் தீவக மக்களை தீய சக்திகளிடம் செல்வதற்கு ஏதுவாக அமையும் என கூறப்படுகிறது.
இது தொடர்பில் தமிழரசுக் கட்சி தலைவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கிடைக்க வில்லை.

ad

ad