புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2015

இரட்டை பிரஜhவுரிமை பெற்ற புலம்பெயர்ந்தோர் எமது நாட்டின் தூதுவர்களாக செயற்பட வேண்டும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர


இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக் கொண்டு புலம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு வரும் இன்று முதல் தாங்கள் வதியும் நாட்டின்
இலங்கைக்கான தூதுவர்களாக செயற்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இலங்கை பற்றிய உண்மைத் தகவல்களை வெளிநாடுகளுக்கு கொண்டு சேர்க்கும் அதேவேளை கடல் கடந்து வாழும் ஒன்றரை மில்லியன் இலங்கையர்களை ஒன்றிணைத்து தாய் நாட்டில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை இரட்டைப் பிரஜாவுரிமையுடையோர் முன்னெடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் கூறினார்.
வெளிநாட்டில் வாழும் இலங்கையர் களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இதன்போது இலங்கையின் பிரஜாவுரி மையை பெறுவதற்காக அங்கு வந்திருந்தவர்கள் மத்தியில் உரையாற்றுகை யிலேயே அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புலம் பெயர்ந்துள்ள இலங்கையர்களுள் அநேகமானவர்கள் கல்விமான்களாகவும் தொழில்சார் நிபுணர்களாகவும் பிற நாடுகளில் திகழ்கிறார்கள்.
நாட்டை சிறந்த நிலைக்கு கொண்டு செல்வதாயின் இவர்களது அறிவுப் பரிமாற்றம் இன்றியமையாதது.
எனவே இவர்களின் அறிவு, அனுபவம், திறமை என்பன உள்நாட்டில் பயன்படக் கூடிய வகையில் அறிவுக் களஞ்சிய மொன்றை உருவாக்க வேண்டுமென்பதே புதிய அரசாங்கத்தின் இலக்காகும். இதனை ஊக்குவிக்கும் வகையில் இவ்வருடம் டிசம்பரில் புலம்பெயர் இலங்கையர்களுக்கான ளிiaspora பிலீstival ஐ இலங்கையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதனைத் தொடர்ந்து வருடந்தோறும் இதனை முன்னெடுப்போம். இந்தியா, அயர்லாந்து ஆகிய நாடுகளில் இது வழக்கத்திலுள்ள விழாவாகும். அதேபோன்று இலங்கையில் நடத்தவுள்ள இந்தவிழாவுக்கும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது :
இலங்கையில் இடம்பெறக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டி அவற்றை திருத்தும் அதிகாரம் புலம்பெயர்வாழ் இலங்கையர்களுக்கு உண்டு. அதேநேரம் இவர்கள் இலங்கை பற்றிய உண்மைத் தகவல்களை சர்வதேசத்திற்கு எடுத்துரைப்பதன் மூலம் நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் பாலமாக செயற்பட வேண்டும்.
நாங்கள் வெளிநாடுகளில் இருந்தாலும் இலங்கையுடன் மிக நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்க வேண்டும்.
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான அனுபவங்கள் மீண்டும் இடம்பெற நாம் அனுமதிக்க கூடாது. அதேநேரம், மோதல்களால் நாம் அனுபவித்த வலியையும் தற்போது இங்கு நிலவும் சமாதான சூழலையும் சர்வதேச நாடுகளுக்கு நாம் தெரியப்படுத்த வேண்டும்.
சமூக. பொருளாதார. கலாசார ரீதியில் இவர்களின் பங்களிப்பினை எதிர்பார்த்து நிற்கிறோம்.
இவர்களிடமிருந்து முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கு மானால் எமது இலக்குகளை விரைவாகவும் இலகுவாகவும் அடையக்கூடியதாகவிருக்கும்.
நாட்டிற்குள் நாம் இன, மத, சமய, மொழி ரீதியாக இருந்தாலும் வெளி நாடுகளில் இலங்கையர் என்ற அடிப் படையிலேயே அடையாளம் காணப் படுகிறோம். அதே உணர்வுடன் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக உழைப் போமெனவும் தெரிவித்தார்.

ad

ad