புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2015

அர்ஜென்டினா ‘நம்பர்–1’: ரேங்கிங்கில் முன்னேற்றம்

‘பிபா’ கால்பந்து தரவரிசையில் அர்ஜென்டினா அணி ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. இந்திய அணி 156வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

உலக கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) நேற்று வெளியிட்டது. இதில், சமீபத்தில் முடிந்த கோபா அமெரிக்க தொடரில் பைனல் வரை முன்னேறிய அர்ஜென்டினா அணி 2வது இடத்தில் இருந்து ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரிலும் அர்ஜென்டினா பைனல் வரை சென்றது. இதன்மூலம் ‘நடப்பு உலக சாம்பியன்’ ஜெர்மனி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கோபா அமெரிக்க தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சிலி அணி, 8 இடங்கள் முன்னேறி 11வது இடத்தை கைப்பற்றியது. பெல்ஜியம் (3வது இடம்), பிரேசில் (6வது), ஸ்பெயின் (12வது), உருகுவே (13வது) சுவிட்சர்லாந்து (18 வது )அணிகள் பின்னடைவை சந்தித்தன. கொலம்பியா (4வது இடம்), போர்ச்சுகல் (7வது) அணிகள் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டன. நெதர்லாந்து (5வது இடம்), ருமேனியா (8வது), இங்கிலாந்து (9வது), வேல்ஸ் (10வது) அணிகள் முன்னேற்றம் கண்டன. 
இப்பட்டியலில் இந்திய அணி 141வது இடத்தில் இருந்து 156வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதற்கு, கடந்த மாதம் நடந்த ஆசிய அணிகளுக்கான உலக கோப்பை (2018) தகுதிச் சுற்றின் 2வது சுற்றில் இந்திய அணி, ஓமன், குவாம் அணிகளிடம் தோல்வி அடைந்தது காரணம்.

ad

ad