புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2015

தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமா . 15வீதம் துண்டு விழுமே

'தமிழகத்தில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன; போராட்டங்களும் நடத்தி வருகின்றன. தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு அமல்படுத்தப்படும்
' என, நேற்று முன்தினம் அறிவித்தார். ஆனால், இது சாத்தியமா என்ற பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.


எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, மது கடைகளை மூடினால், அரசு வருவாயில், 15சதவீதம், 'துண்டு' விழும். ஏற்கனவே நிதி பற்றாக்குறை உள்ள நிலையில், பூரண மதுவிலக்கு சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, அரசு அதிகாரிகள் கூறியதாவது:தமிழக அரசின், 2015-16 வரவு செலவு திட்டப்படி, நடப்பு ஆண்டு வருவாய், 1.42 லட்சம் கோடி. இப்படி பற்றாக்குறை உள்ள நிலையில், 'டாஸ்மாக்' கடைகளை மூடினால், அரசுக்கு, 22 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இது மொத்த வருவாயில், 15 சதவீதம். தற்போது, இலவச திட்டங்களுக்கு, அதிக நிதி செலவிடப்படுகிறது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இலவச திட்டங்களை நிறுத்த முடியாது.எனவே, டாஸ்மாக் கடைகளை மூடினால், நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டி வரும். அதை சமாளிக்க, கூடுதல் வரி விதிக்க வேண்டும்; அதையும் தற்போது செய்ய இயலாது. எனினும், பொதுமக்கள் நலன் கருதி, டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்கலாம்; கடைகள் எண்ணிக்கையை குறைக்கலாம். தற்போதுள்ள நிலையில், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தலாமே தவிர, உடனடியாக அமல்படுத்துவது சாத்தியமல்ல. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


கேரளா முன்னோடி:

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, கர்நாடகாவில் மதுவிலக்கு அமலில் இல்லை. தமிழ கத்தில், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழும்போதெல்லாம், 'அண்டை மாநிலங்கள்,மதுபானங்கள் விற்பனையை நிறுத்தாத நிலையில், நாம் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாது' என, ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர்.ஆனால், தற்போது, தென் மாநில முதல்வர்களுக்கு முன்னோடியாக, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். படிப்படியாக மது கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. அதேபோல, தமிழகத்திலும்மதுபானக் கடைகள் நடத்துவதை அரசு கைவிட வேண்டும் என்பதே, அனைவருடைய விருப்பமாகும்.

மது விற்பனையும் தமிழகமும்:

* நாடு சுதந்திரம் பெறும் முன், அரசின் வருவாயை அதிகப்படுத்த, சாராயம் மற்றும் கள்ளுக் கடைகளை ஆங்கிலேயர்கள் திறந்தனர். 
* காந்தி தலைமையில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, மது அருந்த அரசு, 'பர்மிட்' கொடுத்தது; அவர்கள் மட்டுமே குடிக்க வேண்டும். குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே, மது கடைகள் இருந்தன.
* ராஜாஜி தலைமையில், 1937ல், சென்னை மாகாண அரசு அமைந்ததும், மதுவிலக்கை அமல்படுத்தினார். இது, 1939ல், அவரது அரசு கலைக்கப்பட்டதும் முடிவுக்கு வந்தது.
*தேர்தல் மூலம், ராஜாஜி முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பின், 1952ல், மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்தினார். வருவாய் இழப்பை ஈடுசெய்ய, 1 சதவீதம் கூடுதலாக விற்பனை வரி விதித்தார். 
* 1971ல் முதல்வராக இருந்த கருணாநிதி மது கடைகளை திறந்தார். 
*1974ல் கருணாநிதி மதுவிலக்கை அமல்படுத்தினார். 
* 1984ல், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., கள்ளு கடை, சாராய கடைகளை திறந்தார். 
l* 1987 ஜனவரி, 1ம் தேதி முதல், இந்தியாவில் தயாரிக்கப்படும், அயல்நாட்டு மதுபான 
கடைகளை எம்.ஜி.ஆர்., திறந்தார். இந்த கடைகளை தனியார் ஏலம் எடுத்து நடத்தினர்.
*1991ல், ஜெயலலிதா முதல்வரானதும், மதுவிலக்கை அமல்படுத்தினார். 
*2001ல் ஜெயலலிதா மதுவிலக்கை ரத்து செய்தார். 
* 2003 நவம்பரில், அரசு நிறுவனமான, டாஸ்மாக் நேரடி மதுவிற்பனையை துவக்கியது.

மது விலக்கு பாதிப்பு என்ன?

* தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தினால், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியை ஒட்டிய தமிழக எல்லை பகுதிகளில் இருந்து, மக்கள் எல்லை தாண்டி சென்று, மது அருந்த வாய்ப்பு உண்டு. 'குடி'மகன்களின் பெரும்பான்மையானோர் இந்தக் கருத்தை, வெளிப்படையாகவே கூறுகின்றனர். 
* தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள மாவட்டங்களில், கள்ளச்சாராய உற்பத்தி அதிகரிக்கும். இதன் மூலம், கள்ளச்சாராய சாவு நிகழும். பண்ருட்டி உள்ளிட்ட கடலுார் மாவட்ட பகுதிகள், மரக்காணம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட விழுப்புரம் மாவட்ட பகுதிகளில், சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகள் பிரபலமானது.

ad

ad