புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2015

இந்திய அணி 20 ஓவரில் 178 ரன்கள் எடுத்தது.

 ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி–20’ போட்டியில் இந்திய அணி 20 ஓவரில் 178 ரன்கள் எடுத்தது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி இன்று ஹராரேயில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
முதலில் ‘பேட்’ செய்யும் இந்திய அணிக்கு கேப்டன் ரகானே, முரளி விஜய் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த போது முரளி விஜய் (34) ரன்–அவுட் ஆனார். ரகானே (33) ஆறுதல் தந்தார். மணிஷ் பாண்டே (19), ஸ்டூவர்ட் பின்னி (11), கேதர் ஜாதவ் (9) ஏமாற்றினர்.
இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. ராபின் உத்தப்பா (39), ஹர்பஜன் சிங் (8) அவுட்டாகாமல் இருந்தனர். ஜிம்பாப்வே சார்பில் கிறிஸ் மபோபு 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஹாமில்டன் மசகட்சா (28), சிபாபா (23) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஜிம்பாப்வே அணி 9.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. கோவன்ட்ரி (8) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அக்சர் படேல், ஹர்பஜன் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்

ad

ad