புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2015

விடுதலைப்புலிகள் விவகாரம்: தமிழக அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்!


 விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தும் விதமாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாக தமிழக அரசை கண்டித்து,
ம.தி.மு.க.வினர் வைகோ தலைமையில் இன்று காலை ஆர்பாட்டம் நடத்தினார்கள்.

சமீபத்தில், முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "முல்லைப் பெரியாறு அணைக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் விடுதலைப்புலிகளால் ஆபத்து உள்ளது. எனவே, மத்திய படை பாதுகாப்பு தேவை" என்று குறிப்பிட்டிருந்தது.
சம்பந்தமில்லாமல் விடுதலைப்புலிகளை இதில் குறிப்பிட்டிருப்பதாக தமிழக அரசியல் கட்சிகள் தமிழக அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என வைகோ அறிவித்திருந்தார். இதனிடையே "நாங்கள் அப்படி சொல்லவில்லை, மத்திய உளவுப்பிரிவு இப்படியொரு குறிப்பை அனுப்பியது, அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை" என தமிழக அரசு மறுத்துள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, தமிழக அரசுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக இன்று மதுரை காளவாசலில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார் வைகோ.
அப்போது அவர் பேசுகையில், ''தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலம் பேரிடியாகத் தமிழர்கள் தலையில் விழுந்துள்ளது. இந்தியாவில் உள்ள நீர்த்தேக்கங்கள் பொது நிறுவனங்களுக்கு, தீவிர மதவாத அமைப்புகளாலும், விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகளாலும் முல்லைப்பெரியாறு போன்ற நீர்த்தேக்கங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று மத்திய அரசின் உள்துறை தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஈழத்தமிழர்களுக்குக் கேடு செய்யவும், நீதியைக் குழிதோண்டிப் புதைக்கவும், மத்திய அரசின் வெளிவிவகாரத் துறையும், உளவுத்துறையும் விடுதலைப்புலிகளின் மீது பொய்யான அபாண்டமான புகார்களைக் கூறி புலிகள் அமைப்புக்குத் தடையை நீட்டித்துக் கொண்டு வருகின்றது.

தற்போது தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில், முல்லைப்பெரியாறு அணைக்கு தீவிர மதவாத அமைப்புகளாலும், விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகளாலும் ஆபத்து ஏற்படும் என்பதால், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பைப் கோருவதாகத் தெரிவித்து இருப்பது அக்கிரமம் ஆகும். இதனை ஜெயலலிதாவிற்கு தெரிந்துதான் உச்சநீதிமன்றத்தில் கூறினார்களா, அல்லது தெரியாமல் கூறினார்களா.
விடுதலைப்புலிகளால் பெரியாறு அணைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார், இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார்.

கேரள அரசியல் கட்சிகளே அணையை உடைத்து விட்டு, நக்சலைட்டுகள் மீதும் தீவிரவாத அமைப்புகள் மீதும், ஏன் விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் மீதும் பழிசுமத்தி விட்டுத் தப்பித்துக் கொள்ளும் வழியைத் தமிழக அரசே ஏற்படுத்திக் கொடுப்பது மன்னிக்க முடியாத செயல் ஆகும். அறியாமல் செய்து விட்டோம் என்று ஜெயலலிதா கூறித் தப்பிக்க முடியாது'' என்றார்.

ad

ad