புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2015

புலிகளின் சரணடைவு தொடர்பான சாட்சியங்களால் நெருக்கடி’-அவசரமாக ஜெனீவா விரைகிறது அரச உயர்மட்டக் குழு

ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடருக்கு அரசாங்கத்தின் சார்பில் உயரதிகாரிகள் அடங்கிய குழுவொன்று
அவசரமாக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய வெளிவிவகார அமைச்சு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரின் உறவினர்கள் தற்போது ஐ.நாவில் நேரடியாக சாட்சியமளித்து வரும் நிலையில், அது தொடர்பில் விளக்கமளிக்கவே இக்குழுவினர் அங்கு செல்லவுள்ளதாக தெரியவருகின்றது. போர்க்குற்றம் தொடர்பில் தற்போது இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணை நடத்திவரும் நிலையில், அரசாங்கத்தின் மீதும் படையினர் மீதும் சேறு பூசும் நடவடிக்கையே இதுவென இலங்கை அரசாங்க தரப்பு தகவல்கள குறிப்பிடுகின்றன.
இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணைக்கு வலு சேர்க்கும் வகையில், பல புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் மனித நேய அமைப்புக்கள் உள்ளிட்டவை ஆதாரங்களை திரட்டி வந்தன. இவற்றிற்கு எவ்வாறாகினும் முட்டுக்கட்டையிட்டுக் கொண்டிருந்த இலங்கை அரசாங்கத்தை கதிகலங்க வைத்துள்ளது, ஐ.நா நேரடி சாட்சியப் பதிவு.
அண்மையில் ஜெனீவா மனித உரிமைச் சபையில், விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தளபதிகள் மற்றும் உறுப்பினர்களின் உறவினர்கள், தாம் நேரடியாக எதிர்கொண்ட யுத்த பாதிப்பு, தமது உறவுகள் இலங்கை படையினரால் கூட்டிச் செல்லப்பட்ட விதம், பெண் பிள்ளைகளை ராணுவம் வழிநடத்திய விதம் என்பவற்றை உரைத்துள்ளனர்.
செப்டெம்பரில் வெளிவரவுள்ள ஐ.நா அறிக்கை பெரும்பாலும் தயாராகிவிட்ட நிலையில், இந்த நேரடி சாட்சியப்பதிவானது இலங்கைக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்படியாக அமைந்துள்ளது. இதனால் சுதாகரித்துக் கொண்ட இலங்கை அரசாங்கம் செப்டெம்பர் அறிக்கை வெளிவர முன்னர், குறித்த குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என கூறி அதிலிருந்து தப்பிக்க எத்தனிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

ad

ad