புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூலை, 2015

நீங்கள் ஒன்று சேர வேண்டும்: ஸ்டாலின், இளங்கோவன், திருமாவளவன் முன்பு எஸ்றா சற்குணம் பேச்சு


பேராயர் எஸ்றா சற்குணத்தின் 77வது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டு பேராயர் எஸ்றா சற்குணத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் பேசிய பேராயர் எஸ்றா சற்குணம், மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் விரோதமான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. மத்தியில் மத அடிப்படையிலான மதவாத சக்திகளின் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் ஊழல் நிறைந்த மக்களுக்கு விரோதமான ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சிகளை அகற்ற இந்த தருணத்தில் நீங்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டியது அவசியம்.

கலைஞர் தலைமையில் மீண்டும் ஒரு வெற்றி கூட்டணி அமைந்து மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி உருவாக வேண்டும். அதுதான் எனது விருப்பம். அதற்கு நீங்கள் எல்லாம் ஒத்துழைக்க வேண்டும்.

ஆட்சி அமைந்த பிறகு என்ன வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளுங்கள். முடிந்தால் எனக்கும் ஒரு மந்திரி பதவி தாருங்கள். நானும் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பேசும்போது, கடந்த 2004 தேர்தலின் போது இதே போன்ற ஒரு முயற்சியை பேராயர் எஸ்றா சற்குணம் எடுத்தார். அப்போது, தி.மு.க. தலைமையில் ஒரு வெற்றி கூட்டணி அமைவதற்கு அவரது முயற்சியும் ஒரு காரணமாக இருந்தது.

இதனால் மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி அமைந்தது. அதே போல் வருகிற சட்டசபை தேர்தலிலும் ஒரு வெற்றிக்கூட்டணி உருவாக பேராயர் முயற்சி எடுக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசும்போது, ஒரு பெண்ணை நிறைய பேர் காதலிக்கலாம். ஆனால், அந்த பெண் ஒருவரைத்தான் காதலிப்பார். கல்யாணம் செய்வார். அதே போல் பேராயரை பலர் விரும்பினாலும் அவரோ கலைஞரை மட்டும்தான் விரும்புவார். கலைஞர் தலைமையில் எல்லோரும் ஒன்று சேர வேண்டும். ஒரு நல்லாட்சி வர வேண்டும் என்று தனது கருத்துக்களை பேராயர் தெரிவித்து இருக்கிறார். அந்த எண்ணம் நிறைவேற அவர் பிரார்த்தனை செய்ய வேண்டும். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவரது ஜெபத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. எனவே, அவர் எடுத்துள்ள முயற்சி வெற்றி பெற ஜெபம் செய்ய வேண்டும்’’ என்றார்.

மு.க.ஸ்டாலின் பேசும்போது, பேராயருக்கு வயது 77. ஆனால், எனக்கு வயது 62. அவர் என்னைப் பார்த்து அண்ணன் என்று அழைக்கிறார். அதற்கு காரணம் அண்ணன் பேராயரின் மரியாதை கலந்த பாசம் தான். அவரது பிறந்த நாளில் உங்களோடு சேர்ந்து அவரை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். அவரது பணி தொடர வாழ்த்துகிறேன் என்றார்.

ad

ad