புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2015

இந்திய அரசாங்கத்தின் தலையீட்டில் மைத்திரி – ரணில் ரகசிய ஒப்பந்தம்?


மஹிந்த தரப்பை அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்காக, மைத்திரி – ரணில் ரகசிய ஒப்பந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக மிகவும் நம்பத்தகுந்த அரசியல் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த இணக்கப்பாடு இடம்பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆற்றிய உரையும் இந்த இணக்கப்பாட்டுக்கு அமைய இடம்பெற்ற ஒன்றாகும்.
ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் ஜனாதிபதிக்கு நெருங்கியவர்களை காட்டிக்கொடுக்கவில்லை. எனினும் பிரதமர் இது தொடர்பில் முழுமையான அவதானத்துடன் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையினுள் உள்நாட்டு போர் நிலைமையை ஏற்படுத்தாமல் சர்வதிகார ஆட்சியை மாற்றுவதற்கு ஆட்சியை கைப்பற்றிக் கொள்வதற்காகவும், அதனை நடத்தி செல்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட நடைமுறையிலான ஜனநாயக ஆட்சி முறை தொடர்பில் சர்வதேச பல்கலைக்கழக அளவிலான ஆய்வுகள் மூலம் விருதுகள் கிடைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ad

ad