புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2015

ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடக்கம்



சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி தனிக்கோர்ட் தீர்ப்பை ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் 23–ந் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரு மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் இந்த வழக்கு தொடர்பான 6 நிறுவனங்களை விடுவித்ததற்கு எதிரான மனு ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது.  மேலும், பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தாக்கல் செய்த மனு, பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா? என்பது இன்று தான் தெரியவரும்.

ad

ad