புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2015

சுவிஸ் தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளன கணிப்பில் மீண்டும் லீஸ் யங் ஸ்டார் இந்தவருடமும் சம்பியனாகியது


2014&2015 பருவகாலசுற்றுப் போட்டிகளில் ஆடிய சுவிசின் அனைத்துக் கழ கங்களிடையிலான  புள்ளி கணிப்பின் இறுதியில் கடந்த மாவீரர் சுற்றுப் போட்டி முடிய லீஸ் யங் ஸ்டார் கழகம் கடந்த வருடத்தை போலவே தொடர்ந்து இந்த வருடமும் சம்பியானகியது . 246 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை அடைந்த யங் ஸ்டார் கழகம்   18 சுற்றுபோட்டிகளில் பங்குபற்றி இரண்டைத்  தவிர ஏனைய அனைத்திலுமே அரை இறுதி ஆட்டததினுள் நுழைந்து சாதனை படைத்துள்ளது . அது பங்குபற்றிய 12 உள்ளரங்க சுற்றுப்போடடிகளில்  6 இல் முதலாம் இடத்தையும் 4இல் இரண்டாம் இடத்தையும் ஒன்றில் மூன்றாம் இடத்தையும்  அடைந்திருந்தது யங் ஸ்டாரின் இரண்டாவது அணியும் மூன்று  தடவை இரண்டாம்  இடங்களை பெற்ற்றிருநதது . இரண்டு தடவைகள் எமது முதலாம் இரண்டாம் அணிகள் தமக்கிடையே இறுதி ஆட்டத்தில் மோதிய அற்புதம் கூட நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது .சுவிசில் பாரிய சுற்றுப்போட்டிகளான மாவீரர் கிண்ணம் ,கிட்டு கிண்ணம் ,அன்னை பூபதி கிண்ணம், சம்மேளனக்கிண்ணம், சிவகுமாரன் நினைவுக்கிண்ணம்  உள்ளரங்கசம்பியன் கிண்ணம் உட்பட உலகளாவிய ரீதியில் நடத்தப்படும் தமிழீழ கிண்ணத்தையும் வென்றெடுத்த ஒரே ஒரு  கழகமாகும் . சம்மேளனக் கணிப்பில் இரண்டாம் இடத்தை றோயல் கழகமும் மூன்றாம் இடத்தை யங் பேர்ட்ஸ் கழகமும் தக்க வைத்துள்ளன .யங் ஸ்டார் கழகம் 2012,2014,2015 ஆகிய மூன்று ஆண்டுகள் சுவிஸ் சாம்பியனாக  வந்துள்ளது  அத்தோடு பிரான்சில் நடந்த விக்டர் கிண்ணத்தினை  இறுதியாட்டத்தில் பலமிக்க மலேசிய அணியை எதிர்த்தாடி வென்று வந்தது  சிறப்பானது 

ad

ad