புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2015

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த ஓட்டுனரின் மகள்


ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுனரின் மகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சென்னியப்பன் என்கிற ராஜா, கார் ஓட்டுனராக உள்ளார், இவரது மனைவி சுப்புலட்சுமி.

இந்த தம்பதியரின் மகள் வான்மதி (26), சென்னையில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சேர்ந்தார்.
தீவிர பயிற்சிக்குப் பிறகு கடந்த 2011-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, நேர்முகத்தேர்வு வரை சென்றவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
ஆனாலும், முயற்சியைக் கைவிடாத அவர், 2013-ம் ஆண்டு மீண்டும் தேர்வெழுதி முன்பு போலவே நேர்முகத்தேர்வு வரை சென்று நூலிழையில் வெற்றியை நழுவவிட்டார்.
3-வது முறையாக கடந்த ஆண்டு முயற்சி செய்த அவர், சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 152-வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு வங்கி அதிகாரி தேர்வெழுதி வெற்றிபெற்ற அவர், தற்போது ஈரோடு நம்பியூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.
வான்மதி கூறுகையில், கல்லூரியில் படிக்கும்போது தான் ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது.
பொருளாதாரப் பிரச்சினையால் என்னால் ஐஏஎஸ் அதிகாரி ஆக முடியுமா என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டது.
ஆனால், நான் முதல் முயற்சியில் நேர்முகத்தேர்வு வரை சென்றதால், என் மீது அவர்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது.
ஐஏஎஸ் தேர்வைப் பொருத்த வரை, அனைத்துப் பாடங்களைப் பற்றிய அடிப்படை அறிவு முக்கியம்.
மேலும், கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் போதும், எந்த தடைகளையும் தாண்டிவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

ad

ad