புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2015

தேசியத் தலைவரால் நிராகரிக்கப்பட்டவர் வித்தியாதரன் :சகல தமிழரும் சிந்திக்க வேண்டும்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து பணியாற்றிய போராளிகளை ஒன்றிணைத்து ஜனநாயகப் போராளிகள் என்ற அரசியல் கட்டமைப்பை வடக்கில் அங்குரார்ப்பணம் செய்துள்ளதாக ஊடகவியலாளர் வித்தியாதரன் அறிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் கடமைகளைச் செய்வதற்காக இப்புதிய அமைப்பு தேற்றம்பெற்றுள்ளது என்பதும் முதல்கட்டமாக சுமார் 25 போராளிகள் அகிம்ஷைப் போராளி திலீபன் உண்ணாவிரதம் இருந்து வீரகாவியமான நல்லூரிலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளனர் என்பதும் வித்தியாதரனின் அறிவிப்பாகும்.
இந்த அமைப்பு யாழில் தேற்றம்பெற்றுள்ள விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு முன்னதாக யார் இந்த வித்தியாதரன் என்பதை நாம் உற்றுநோக்குவது பொருத்தமானதாக அமையும்.
வித்தியாதரன், உதயன் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சரவணபவனின் மைத்துனர். யாழிலிருந்து வெளிவருகின்ற உதயன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்.
ஆனால், இவர் பத்திரிகைத் துறையிலிருந்து ஒதுங்கி தன்னுடைய அல்லது தன்னை வழிநடத்துகின்றவர்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக மலரும் என்ற இணைத்தளத்தை நடத்திவருகின்றார். ஆனால் இவருக்கும் இந்திய உளவு அமைப்பான றோவுக்கும் இடையில் நீண்டகாலமக உறவிருப்பதாக சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் தமிழ் மக்களின் தேசியத் தலைவருமாகிய அதிமேதகு வே.பிரபாகரன் அவர்கள், கடந்த 2002 ஆம் ஆண்டு வன்னியில் உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களைச் சந்தித்த சமயம் வித்தியாதரனுடன் சேர்த்து மூவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதேபோல் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழ்செல்வத்தை சந்திப்பதற்கே கிளிநொச்சியில் வித்தியாதரன் நீண்டநேரம் காத்திருந்த காலமுண்டு.
ஆனால்விடுதலைப் புலிகளின் காலத்திற்குப் பின்னர் தேசியத் தலைவர் பிரத்தியேகமான தொடர்புகளைத் தன்னுடன் பேணிவந்ததைப் போன்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தி தன்சார்பானவர்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்திசெய்வதற்கும் வித்தியாதரன் அதிக பிரயத்தனம் எடுத்துவருகிறார். மேலும் இக்குறிக்கோளை எட்டுவதற்கு தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்திற்கு ஆலோசகராக தான் இருந்ததாகவும் வித்தியாதரன் வேடிக்கையாகப் பேசிவருகின்றார்.
இந்தவகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்துடன் நேரடியான தொடர்புகள் எதுவுமற்றவராக இருந்த வித்தியாதரனுக்கு முள்ளிவாய்க்கால் அவலத்திற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாக இருந்தவர்கள் மீதும் தமிழ் மக்கள் மீதும் அதிக அக்கறை ஏற்பட்டுள்ளது.
குறிபாக முள்ளிவாய்க்கால் அலத்திற்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு எதிரான சிங்களத்தின் போராட்டம் தாயகத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தாயகத்தில் தமிழ் மக்களின் தேசிய உணர்வை அழித்து புதிய தலைமுறையை உருவாக்கி தமிழினச் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு உணர்வுகளற்ற, சிந்திக்க முடியாத புதிய தமிழ்த் தலைமுறையை தாயகத்தில் உருவாக்க வேண்டும் என்பதில் இந்தியாக் கொள்கை வகுப்பாளர்களும் யாழில் தங்கியிருக்கின்ற இந்திய அதிகாரிகளின் உடாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
VPerumal_jpg-1இந்திய உளவு அமைப்பினால் நேரடியாக வழிநடத்தப்படுகின்ற வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பொருமாள் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து நிலமைகளை அவதானித்து வருகின்றார்.
 
இது இவ்வாறிருக்க முள்ளிவாய்க்கால் அலத்திற்குப் பின்னர் கோட்டபாய பாதுகாப்பு அமைச்சின் செயலராக இருந்த பொழுது முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு முற்சித்தனர். ஆனால் அப்பொழுது அந்த முயற்சி கைகூடவில்லை. அதன் பின்னர் இப்பணியை தற்பொழுது வித்தியாதரன் பொறுப்பேற்று முன்னாள் போராளிகள் என்ற வடிவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி, தமிழ் மக்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, தமிழ்த் தேசிய உணர்வற்ற புதிய தமிழ்த் தலைமுறையை உருவாக்க முயற்சித்து வருகின்றார்.
தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து தேசிய உணர்வுள்ள கடும்போக்கு அரசியல்வாதிகளை அகற்றி, போராட்டகாலத்தில் தெற்குடன் ஒட்டி உறவாடி, கைநனைத்த  கொழும்பு உயர்வர்க்கத் தமிழர்களை நியமிக்க வேண்டும் எனச் சிங்களம் மேற்கொட்ட முயற்சியால் விக்னேஸ்வரன், சுமந்திரன் போன்றவர்கள் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுழைந்துள்ளனர்.
இதேபோன்று போராளிகளை ஒன்றிணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சிதைத்து தமிழ் மக்களின் அரசியல் பலத்தைக் குறைப்பதும் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலாகும். இதற்கும் முன்னாள் போராளிகள் என்ற நாமம் பயன்படுத்தப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் முதலில் அகிம்ஷைப் போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஆயுதப்போராட்டமாக பரிணமித்து முள்ளிவாய்க்காலில் சிங்களத்தால் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த முள்ளிவாக்கால் அவலத்தைத் தடுக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சகல தமிழ் மக்களும் போராடியுள்ளனர்.  அதேபோல் தாயகத்தில் சிங்கள அரச கட்டுப்பாட்டுக்குள் இருந்த சிலர் பகுதியளவில் உதவியுள்ளனர்.
ஆனால் இப்போரட்டத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சியையும் விரும்பாத கொழும்பு மேல்வர்க்கத் தமிழர்கள் எமது போராளிகளை அழிக்க வேண்டும், போராட்டத்தை நசுக்கவேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருந்து சிங்களத்திற்கு காட்டிக்கொடுத்து போராட்டத்தை உருக்குலைத்து முள்ளிவாய்க்கால் பேரவலம் ஏற்படுவதற்கு ஏதோவொருவகையில் காரணமாக இருந்துள்ளனர்.
இதனை விளங்கிக் கொண்டவராக, தமிழீழ தேசியத் தலைவர் தனது தீர்க்கதரிசனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய பொழுது கட்சி பேதமற்ற முறையில் அரசியல்வாதிகளைக் தேர்ந்தெடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியை உருவாக்கியிருந்தார். ஆனால் முள்ளிவாய்க்கால் அவலத்திற்குப் பின்னர் இக்கட்சிக்குள் பல தவறானவர்கள் நுழைந்துள்ளனர்.
இதேபோல் இக் கூட்டமைப்பை சிதைத்து தமிழ்த் தேசிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பதற்காக தற்பொழுது வித்தியாதரன் களமிறக்கப்பட்டுள்ளார். 
இவ்வாறு களமிறக்கப்பட்டுள்ள வித்தியாதரன் முன்னாள் போராளிகள் சிலருடன் சிங்கள புலனாய்வாளர்களால் தயார்படுத்தப்பட்ட சிலரையும் அழைத்துச் சென்று நல்லூரில் கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையடலில் சுமார் 25 போர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இக்குழுவிற்கு வித்தியாதரன் தலைவாராக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமே இவர்களுடைய முதலாவது பணி எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனூடக இந்த அமைப்பு ஏன் உருவாக்கப்பட்டுள்ளது? யாருடைய தூண்டுதலுடன் உருவாக்கப்பட்டுள்ளது? இவர்கள் யார்? போன்ற விடயங்களை ஊகிக்கமுடியும்.
இது இவ்வாறிருக்க, முன்னாள் போராளிகள் புதிய அரசியல் கட்சியை அமைப்பதற்கு தாயகத்தில் சிங்களம் இன்னமும் அனுமதியளிக்கவில்லை. இதற்கு இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் இடம்கொடுக்காது. புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட ஐந்து முன்னாள் போராளிகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மீண்டும் கைதுசெய்யப்பட்டு அரசியல் கைதிகளாக கொழும்பு மகசீன் சிறையில் தற்பொழுதும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
 
இவ்வாறானதொரு நிலையில் முன்னாள் போராளிகள் தாயகத்தில் சுதந்திரமாக அரசியல் விடயங்களைக் கையாள முடியாது. அதற்கு சிங்களத்தின் தயவு வேண்டும். சிங்களத்தின் தயவின்றி இக்கலந்துரையாடல் இடம்பெற்றிருக்குமாயின் உடனடியாகவே வித்தியாதரனும் அவரால் முன்னாள் போராளிகளாக அறிமுகப்படுத்தப்பட்டவர்களும் கைதுசெய்யப்பட்டிருப்பார்கள். வித்தியாதரன் தற்பொழுது மகசீன் சிறையில் இருந்திருக்க வேண்டும்.
இந்நிலையில், தன்னால் அறிமுகப்படுத்தப்படுகின்ற முன்னாள் போராளிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம்கொடுக்க வேண்டும் என வித்தியாதரன் மாவை. சேனாதிராசாவிற்கு எச்சரிகை விடுத்துள்ளார். தவறின் முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து புதிய அரசியல் கட்சியை உருவாக்கி தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யத் தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
ஆனால்,தாயகத்தில் முன்னாள் போராளிகள் பலர் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை. போராளிகளுடைய அன்றாட செயற்பாடுகள் சிங்களப் புலனாய்வாளர்களால் தினமும் கண்காணிக்கப்பட்டு, சிலர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் விடுவிக்கப்பட்டவர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பதால் அரசியல் ரீதியாகச் சிந்தியக்க முடியாதவர்களாக, வலுவற்றவர்களாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களைக் காட்டி தமது இலக்கினை அடைந்துகொள்வதற்கும் வித்தியாதரன் முயற்சிக்கின்றார் என்பதும் முன்னாள் போராளிகளின் ஆதங்கம்.
எனவே இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் முன்னாள் போராளிகளும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் தாயக மக்களும் விழிப்புடன் செயற்படவேண்டும். குறிப்பாக முன்னாள் போராகள் எடுக்கின்ற முடிவுகளும் தீர்மானங்களும் தமிழ் மக்களின் தேசிய உணர்வுகளைச் சிதைக்காத வகையில் அமைய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் அவாவாகும்.
 ~இராவணன்~

ad

ad