புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2015

தமிழ் எம்.பிக்களின் கொலையுடன் தொடர்புடையவருக்கு ஐ.ம.சு.மு பட்டியலில் இடம்? முரளியின் அதிர்ச்சித் தகவல்

கொலைகளில் அவர் நேரடியாக ஈடுபட்டமைக்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் தெரிவிப்பு
இறுதி யுத்தத்தில் புலிகளை அழிக்க 600 பேரை வழங்கியும் உதவினாராம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு மற்றும் பேராசிரியர் ரவிந்திரநாத்தின் கொலைகளுடன்
நேரடியாகத் தொடர்புபட்ட ஒருவருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட் டியிட இடமளிக்கப்பட்டுள்ளது.
முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த சுய விருப்பின் பேரில் இந்த இடத்தை வழங்கியுள்ளார். கொழும் பிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் குறித்த நபர் தமிழ் எம். பிக்களின் கொலைகளில் நேரடியாகப் பங்கேற்றார் என்பதற்கான ஆதாரங்கள் முழுமையாகத் தன்னிடம் உள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும் குறித்த நபரின் பெயரை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
இதேவேளை வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் தனக்கு சார்பான 600 பேரை புலிகளுக்கு எதிராகப் போரிட அனுப்பினார் என்றும் அதில் தற்போது 300 பேரே எஞ்சியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். தேசிய பட்டியலில் தனக்கு எம். பி பதவி தரப்படும் என சுதந்திரக் கட்சியின் பொது செயலர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொது செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவும் வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டனர் எனத் தெரிவித்து வரும் முரளிதரன் இப்போது இறுதி யுத்தத்தில் நடந்த பல விடயங்கள் குறித்து வாய் திறந்துள்ளார்
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள தகவலிலேயே இந்தத் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு, போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த சமயத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ என்னுடைய உதவு தேவை எனக் கோரினர்.
அச்சமயத்தில் நாட்டுக்காக நான் முக்கியமான ஆபத்தான முடிவை நான் எடுத்தேன். இதனால் தமிழ் மக்களிடம் இருந்து எதிர்ப்பை சம்பாதிக்க நேர்ந்துள்ளது. அச்சமயத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து என்னுடன் பிரிந்து வந்த 600 பேரை நான் போரிட அனுப்பினேன்.
ஆனால் அதில் 300 பேரே எஞ்சினர். தற்போது நானே அதற்கான பொறுப்பை ஏற்க நேரிட்டுள்ளது இது மகிழ்ச்சியான ஒரு சூழல் இல்லை. இது பற்றி நான் முடிவு ஒன்றை எடுக்க வேண்டியுள்ளது என்றார்.

ad

ad