புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2015

சரக்கு மற்றும் சேவை வரி மீதான தேர்வுக் குழுவின் பரிந்துரைக்கு டெல்லி மேல்–சபையில் அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு

சரக்கு மற்றும் சேவை வரி மீதான தேர்வுக் குழுவின் பரிந்துரைக்கு அ.தி.மு.க. காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

சரக்கு மற்றும் சேவை வரி
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைகள் மீது ஒரே சீரான வரிமுறையை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1–ந்தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் ஏற்கனவே நிறைவேறிவிட்டது.
எனினும், ஆளும் கட்சிக்கு டெல்லி மேல்–சபையில் போதிய பலம் இல்லாததால் இந்த மசோதா நிறைவேறவில்லை. இந்த மசோதாவில் பல்வேறு மாறுதல்களை செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
அறிக்கை தாக்கல்
இதையடுத்து பா.ஜனதா எம்.பி. பூபேந்தர யாதவ் தலைமயில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டு இந்த மசோதாவை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் உத்தரவிடப்பட்டது. இந்தக் குழு நேற்று தனது அறிக்கையை மேல்–சபையில் தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையின்படி மாநிலங்களுக்கு இடையேயான வரிவிதிப்பு முறையில் மாநிலங்களுக்கு கூடுதலாக ஒரு சதவீத வரி கிடைக்கும் என்றும் வரி இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகள் வரை நஷ்டஈடு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
அதே நேரம் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிவிதிப்பை சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் தீர்மானிக்கும் என்றும் இந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.
அ.தி.மு.க., காங்கிரஸ் எதிர்ப்பு
இதற்கு அ.தி.மு.க., காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பெட்ரோலிய பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்று அவை வலியுறுத்தின. இதேபோல் சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலில் மத்திய அரசின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 3–ல் ஒரு பங்காக இருப்பதை 4–ல் ஒரு பங்காக குறைக்கவேண்டும் எனவும் அ.தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இடது சாரி கட்சிகள், சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பில் மத்திய அரசின் பங்கு இருப்பதால், அதன் தாக்கம் இருக்கும். மேலும் இந்த வரிவிதிப்பு தனியார் தொழில் நிறுவனங்கள் பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்வதற்கு சாதமாக அமைந்து விடக்கூடாது என்று கவலை தெரிவித்தன.
எனினும் பெரும்பாலான கட்சிகள் தேர்வுக்குழுவின் பரிந்துரைகளை வரவேற்று உள்ளன.

ad

ad