புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2015

கொலைகள் , காணாமல் போதலுக்கு பாதுகாப்பு தரப்புக்கு தொடர்பு ; விசாரணையில் அம்பலம்


நாடாளுமன்ற உறுப்பிர்கள், ஊடகவியவாளர்கள் கொலை செய்யப்பட்டமை மற்றும்  காணாமல் ஆக்கப்பட்டமைக்கு பாதுகாப்பு தரப்பினருக்கு தொடர்பு உள்ளது என விசாரணைகள்
மூலம் அம்பலமாகியுள்ளது.
காணாமல் போதல் சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுடீகன் ஆகியோரின் படுகொலைகளுடன் பாதுகாப்புத் தரப்பிற்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளும் சாட்சியங்களை திரட்டும் நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளன.
பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள் இந்த கொலைகளை செய்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு தரப்பிற்கு தலைமை தாங்கிய முக்கியஸ்தர் ஒருவரின் கட்டளைகளுக்கு அமைய இந்தக் கொலைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வசீம் தாஜூடீன் தனிப்பட்ட குரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டமை விசாரணைகளின் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது. இந்த நான்கு படுகொலைகள் தொடர்பிலும் முக்கியமான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

ad

ad