புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2015

சு.க. மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு இடைக்கால தடை-கொழும்பு மாவட்ட நீதிமன்றம்


கட்சியின் செயலர் அநுர யாப்பாவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு


ஜனாதிபதியின் அனுமதியின்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவைக் கூட்டுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதனைத் தடைசெய்யும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிபதி ஹர்ஷ சேதுங்க நேற்று இடைக்காலத் தடையுத்தர வொன்றைப் பிறப்பித்திருந்தார்.
கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிராக இந்தத் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதுடன், இந்தத் தடையுத்தரவு 14 நாட்களுக்குச் செல்லு படியாகும்.
கட்சியின் தலைவர் ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி மத்திய செயற்குழுக் கூட்டம் கூட்டுவது சட்டவிரோதமானது என்பதுடன் கட்சியின் யாப்புக்கு விரோத மானது என கட்சியின் செயற்குழு உறுப்பினரான கொட்டிக்காவத்த முல் லேரியா பிரதேசசபையின் தலைவர் பிரச்சன்ன சோலங்க ஆராய்ச்சி இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
மனுதாரர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி வேரகொட தெரிவிக்கையில்; கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு கட்சியின் யாப்பின் படி கட்சித் தலைவருக்கே அதிகாரங்கள் உள்ளன. கட்சியின் தலைவருக்குத் தெரியாமல் கூட்டப்பட்ட இந்த மத்திய செயற்குழுக் கூட்டம் சட்டவிரோதமானது. யாப்புக்கும் விரோதமானது. எனவே கூட்டத்தை நடத்துவதற்கு தடைவிதிக்குமாறு நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, தடையுத்தரவையும் இடைக்காலத் தடையுத்தரவையும் பிறப்பித்ததுடன், அநுர பிரியதர்ஷனயாப்பாவை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.
சட்டத்தரணி லங்கா தர்மசிறி ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிற்கு சட்டத்தரணி இரேஷ் செனவிரட்னவும் ஆஜராகியிருந்தார்.

ad

ad