புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூலை, 2015

உதயன் பத்திரிகைக்கு எதிராக டக்ளஸ் தொடுத்த வழக்கு செப்ரெம்பருக்கு ஒத்திவைப்பு


உதயன் பத்திரிகையில் 29.04.2012 ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ்ஸை ஆதாரம்காட்டி 2006 தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்.குடாநாட்டில்
இடம்பெற்ற கடத்தல்கள், கொலைகள், கப்பம்  பெற்றமையுடன்  ஈ.பி.டி.பியினர்  தொடர்புபட்டுள்ளனர் என்ற செய்தி தொடர்பில் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை எதிர்வரும் செப்ரெம்பர் 15 ஆம்  திகதி வரை ஒத்திவைக்குமாறு மாவட்ட நீதிபதி  கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.
 
உதயன் பத்திரிகையின் குறித்த செய்தியினால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக  தெரிவித்து நீதிகோரியும்  நிதிகோரியும்  ஈ.பி.டி.பியின்  செயலாளர் டக்ளஸ் தேவானந்தா வழக்கு தொடுத்திருந்தார். 
 
குறித்த வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது டக்ளஸ் தேவானந்தா மன்றில் சாட்சியமளித்தார். சாட்சிய முடிவில் குறுக்கு விசாரணையினை பத்திரிகை சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி சுமந்திரனால் செய்யப்படவிருந்தது. 
 
எனினும்  உடல் நலக்குறைவினால் தொடர்ந்தும்  தனக்கு பதிலளிக்க முடியாது என்றும்  பிறிதொரு தினத்தை தரும்படி தனது சட்டத்தரணி ஊடாக டக்ளஸ் தேவானந்தா நீதிபதியிடம்  கோரினார். 
 
அதற்கமைய குறித்த வழக்கின் குறுக்குவிசாரணைகள் எதிர்வரும்  செப்ரெம்பர் மாதம் 15 ஆம்  திகதிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டார். 

ad

ad