புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜூலை, 2015

தற்போதைய செய்தி //மது ஒழிப்பு போராட்டத்தில் சசிபெருமாள் மரணம் ( படங்கள் )



காந்தியவாதி சசிபெருமாள், மது ஒழிப்பு போராட்டத்தின்போது மரணம் அடைந்தார்.

60 வயதாகும் காந்தியவாதி சசிபெருமாள் சேலம் மாவட்டத்தைச்சேர்ந்தவர்.  கடந்த 30 வருடங்களாக பூரண மதுவிலக்கு கோரி போராடிவந்தார்.  மதுவிலக்கு கோரி பலமுறை உண்ணாவிரதம் இருந்து வந்தார்.  


மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதையடுத்து மதுவுக்கு எதிரான பேராட்டக்குழுவை அமைத்தனர்.  இந்த குழுவின் மூலம் பள்ளிகள், கோவில்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  இப்பகுதி மக்களுடன் பல்வேறு முறை போராட்டத்தில் பங்கேற்றுள்ளார் சசிபெருமாள்.

இந்நிலையில் இன்று, டாஸ்மாக் கடைகளை அகற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், 200 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறிய காந்தியவாதி சசிபெருமாள் தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தீயணைப்பு படையினரின் முயற்சியால் காந்திவாதி சசிபெருமாள் மீட்கப்பட்டார்.  5 மணிநேரம் செல்போன் கோபுரத்தில் நின்று போராட்டம் நடத்தியதால் மிகவும் உடல்நலன் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.   ரத்த வாந்தி எடுத்து மயங்கிய சசிபெருமாள் மரணம் அடைந்தார்.

ad

ad