புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2015

இலங்கை கிரிக்கட் அணியின் மீதான தாக்குதலுக்கு திட்டமிட்டவர் சுட்டுகொல்லப்பட்டார்


2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானுக்கு சென்றபோது அதன் மீது தாக்குதல் நடத்தியமைக்கு திட்டம் வகுத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நேற்று இரவு இவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாகிஸ்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சன்னி முஸ்லிம் பிரிவின் தலைவரான மலிக் இசாக் என்ற இவரும் மேலும் 11 பேரும் பொலிஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றபோதே சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இசாக்கும் அவருடைய இரண்டு மகன்மாரும் கடந்த வாரம் ஆயுதங்கள் வைத்திருந்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டனர்.
இதன்பின்னர் நேற்று மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட ஆயுதங்களை மீட்பதற்காக அவர்கள்  பஞ்சாப் பிராந்தியத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டவேளை சன்னி முஸ்லிம் போராளிகள் அவர்களை விடுவித்துக்கொள்ளும் வகையில் பொலிஸ் மீது தாக்குதல் நடத்தினர்.
இதன் போது லக்சரீ ஜங்கீயின் தலைவரான மலிக் இசாக் மற்றும் அவரின் இரண்டு மகன்மார் உட்பட்ட 11பேர் கொல்லப்பட்டனர்

ad

ad