புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2015

பிரபல தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் மரணம்




பிரபல தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் அ.செ.இப்ராகிம் ராவுத்தர் சென்னையில் இன்று கால மானார்.

மதுரை தெற்கு வாசலை சேர்ந்தவர் ராவுத்தர்.  கடந்த 30 வருடங்களுக்கு முன்பு சக நண்பரான விஜயராஜ் ( விஜயகாந்த்) உடன் சென்னைக்கு வந்தார்.  பிரபல சினிமா தயாரிப்பாளரான எம்.ஏ.காஜா என்பவர் மூலம் சென்னைக்கு வந்தார்கள். சினிமா - அரசியல் பிரவேசம் என  25 ஆண்டு காலம்   ராவுத்தருடன்ன் விஜயகாந்த் நெருக்கமாக இருந்தார்.  கேப்டன் பிரபாகரன், புலன்விசாரணை , உழவன் மகன் உட்பட பெரும்பாலான திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராக தனது நண்பரான இப்ராகிமையே வைத்துக்கொண்டார் விஜயகாந்த்.  28 படங்களை தயாரித்துள்ளார். தொடர்ந்து விஜயகாந்துக்கு திருமனம் பேச்சுவார்த்தை எழுந்தபோது,  விஜயகாந்த் பிரபல தமிழ் நடிகை ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான நிச்சயதார்த்தம் பேச்சு எழுந்தபோது,  அந்த திருமணத்தை நிறுத்தி, பிரேமலாதாவை மணமகளாக ஆக்கியது இப்ராகிம் ராவுத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.   பின்னர் இந்த நட்பில் விரிசல் விழுந்தது.  அந்த அதிருப்தியில் காங் பிரமுகராக இருந்த ராவுத்தர், கடந்த சில அண்டுகளூக்கு முன்பு அதிமுகவில் இணைந்தார். அதிமுகவிலும் தனக்கு முக்கியத்துவம் ஏதும் தரப்படாத நிலையில் பெரும் பின்னடவை சந்தித்தார்.  மனக்கஷ்டத்தில் இருந்த  ராவுத்தர் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ராவுத்தரை விஜயகாந்த் நேரில் சென்று பார்த்தார்.   சுயநினைவு இல்லாமல் ராவுத்தர் இருந்ததைக்கண்டு கதறி அழுதார் விஜயகாந்த். 

 அவர் சுயநினைவில்லாமல் இருப்பது கண்டு அவரது உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்திருக்கிறார்.   அங்கு அவரது நிலைமை கண்டு மனம் வருந்தி விஜயகாந்த் அவரது நண்பருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், 
 
’’நண்பா, நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை உடல் நலம் விசாரிக்க வந்தேன். அங்கு நீ சுயநினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததை கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன். உன்னை கண்டவுடன் சிறுவயது முதல் நாம் கொண்ட உண்மையான நட்பும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் போராடி நாம் பெற்ற வெற்றி தோல்விகளும் என் கண் முனே வந்து சென்றது. காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மன கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வர வேண்டும் என்று என் பிரார்த்தனையை கடவுளிடத்திலே வைக்கிறேன். நண்பா மீண்டு வா, எழுந்து வா
 
- அன்புடன் உன் நண்பன் விஜயகாந்த்’’ என்று எழுதியிருந்தார்.

இந்நிலையில் இன்று ராவுத்தர் மரணம் அடைந்தார்.

63 வயதாகும் இப்ராகிம் ராவுத்தர் காதலிக்காக, காதலிக்கு செய்துகொடுத்த சத்தியத்தின்படி,  கடைசிவரைக்கும்  திருமணமே செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

ad

ad