புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2015

ஜாதிக ஹெல உறுமய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறுகிறது

 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறுவதாக, சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டதை அடுத்தே, அந்தக் கூட்டணியில் இருந்து விலகுவதென கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில்,  நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் புதியதொரு கூட்டணியை அமைத்துப் போட்டியிடப் போவதாகவும், சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.
 அதேவேளை, தினேஸ் குணவர்த்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து- வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது.

தினேஸ் குணவர்த்தன தலைமையில் நேற்று நடந்த கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக, மக்கள் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலர் திஸ்ஸ யாப்பா ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டதையடுத்தே, மக்கள் ஐக்கிய முன்னணி இந்த முடிவை எடுத்துள்ளது.

ad

ad