புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2015

போரை வென்றது முப்படையினரே அன்றி ராஜபக்சவினர் அல்ல: மங்கள சமரவீர

விடுதலைப் புலிகளுடனான போரை ராஜபக்சவினர் வெல்லவில்லை எனவும் நாட்டின் முப்படையினரே அதனை வென்றதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வெலிகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ராஜபக்ச அரசாங்கம் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. யுத்த வெற்றியினை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தமக்குரியவைகளை செய்து கொண்டனர்.
2009 ஆம் ஆண்டு போர் வெல்லப்பட்டது. அது குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். யுத்தத்தை வென்றது ராஜபக்சவினர் அல்ல. இந்த நாட்டின் முப்படையினரே அதனை வென்றனர்.
யுத்தத்தில் வெற்றி பெறும் பின்னணியை இந்த நாட்டில் ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் உருவாக்கின.
1994 ஆம் ஆண்டு ஆட்சியை சந்திரிக்காவிடம் ஒப்படைக்கும் முன்னர், முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்துதான் கிழக்கு மாகாணத்தை மீட்டனர்.
1994 ஆம் ஆண்டுக்கு பின்னர், விடுதலைப் புலிகளின் தலைமையிடமாகவும் பிரபாகரனின் அலுவலகம் அமைந்திருந்த யாழ் கச்சேரி உட்பட யாழ்ப்பாணத்தை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தை சந்திரிக்கா தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் படையினர் கைப்பற்றினர்.
முல்லைத்தீவில் இறுதியாக இருந்த புலிகளை மகிந்த ராஜபக்ச தோற்கடித்தார். எனினும் போர் வெற்றியினால் கிடைத்த பிரதிபலன்களை மக்களுக்கு கொடுக்காத மகிந்த ராஜபக்ச, போர் வெற்றியை தமது குடும்பத்தின் வெற்றியாக காண்பித்து, அதன் மூலம் தனது சர்வாதிகாரத்தை நாட்டில் உறுதிப்படுத்த முயற்சித்தார் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ad

ad